தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2726

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 தன்னை விடுதலை செய்வதற்காகத் தன்னை விற்பதற்குச் சம்மதிக்கின்ற முகாத்தப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) தொடர்பான நிபந்தனைகளில் செல்லத் தக்கவை.

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுக்கப்பட்டிருந்த அடிமைப் பெண்ணான பரீரா என்னிடம் வந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! என் எஜமானார்கள் என்னை விற்கப் போகிறார்கள். எனவே, என்னை நீங்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்யுங்கள்’ என்று கூறினார். நான், ‘சரி (அப்படியே செய்வோம்)’ என்று கூறினேன்.

அவர், ‘என் எஜமானர்கள், என் வாரிசுரிமை தங்களுக்கே உரியது என்று நிபந்தனையிடாமல் என்னை விற்க மாட்டார்கள்’ என்றார். அதற்கு நான், ‘அப்படியென்றால் உன்(னை வாங்க வேண்டிய) தேவை எனக்கில்லை’ என்று கூறினேன். இதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்ற போது… அல்லது இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டிய போது… அவர்கள், ‘பரீராவின் விஷயம் என்ன?’ என்று கேட்டுவிட்டு, ‘அவர்கள் விரும்பியதையெல்லாம் நிபந்தனையிட்டுக் கொள்ளட்டும்.

நீ அவரை வாங்கி விடுதலை செய்து விடு’ என்று கூறினார்கள். எனவே, நான் அவரை வாங்கி விடுதலை செய்து விட்டேன். அவரின் எஜமானார்கள், ‘அவரின் வாரிசுரிமை எங்களுக்கே உரியது’ என்று நிபந்தனை விதித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘(அடிமையை) விடுதலை செய்பவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்; அவர்கள் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே’ என்று கூறினார்கள்.
Book :54

(புகாரி: 2726)

بَابُ مَا يَجُوزُ مِنْ شُرُوطِ المُكَاتَبِ إِذَا رَضِيَ بِالْبَيْعِ عَلَى أَنْ يُعْتَقَ

حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ أَيْمَنَ المَكِّيُّ، عَنْ أَبِيهِ، قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

دَخَلَتْ عَلَيَّ بَرِيرَةُ وَهِيَ مُكَاتَبَةٌ، فَقَالَتْ: يَا أُمَّ المُؤْمِنِينَ اشْتَرِينِي، فَإِنَّ أَهْلِي يَبِيعُونِي، فَأَعْتِقِينِي قَالَتْ: نَعَمْ، قَالَتْ: إِنَّ أَهْلِي لاَ يَبِيعُونِي حَتَّى يَشْتَرِطُوا وَلاَئِي، قَالَتْ: لاَ حَاجَةَ لِي فِيكِ، فَسَمِعَ ذَلِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَوْ بَلَغَهُ – فَقَالَ: «مَا شَأْنُ بَرِيرَةَ؟»، فَقَالَ: «اشْتَرِيهَا، فَأَعْتِقِيهَا وَلْيَشْتَرِطُوا مَا شَاءُوا»، قَالَتْ: فَاشْتَرَيْتُهَا، فَأَعْتَقْتُهَا وَاشْتَرَطَ أَهْلُهَا وَلاَءَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ، وَإِنِ اشْتَرَطُوا مِائَةَ شَرْطٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.