தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2728

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 மக்களிடம் விதிக்கப்படும் வாய்மொழி நிபந்தனைகள்.

 ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

உபை இப்னு கஅப்(ரலி), ‘மூஸா, அல்லாஹ்வின் தூதரவார்.’.. என்று தொடங்கி, நபி(ஸல்) அவர்கள் (மூஸா (அலை) தொடர்பாகக்) கூறிய முழு ஹதீஸையும் கூறத் தொடங்கினார்கள்: களிரு(அலை) அவர்கள், ‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று நான் கூறவில்லையா?’ என்று (மூஸா (அலை) அவர்களை நோக்கிக்) கேட்டார்கள். மூஸா (அலை) அவர்கள் களிரு (அலை) அவர்களின் நடவடிக்கைகளை ஆட்சேபித்து) முதல் முறையாகக் கேட்டது மறதியால் கேட்டதாகவும், நடுவில் சொன்னது அவர் விதித்த நிபந்தனையாகவும், மூன்றாவது முறை கேட்டது, வேண்டுமென்றே செய்ததாகவும் இருந்தது.

(இது தொடர்பான இறைவசனங்கள் வருமாறு:)
‘நான் மறந்து போனதற்காக என்னைத் (திரும்பிப் போகச் சொல்லித் தண்டித்து விடாதீர்கள்.) என் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள்.
‘பிறகு இருவரும் ஒரு சிறுவனைச் சந்தித்தார்கள்; அப்போது, அவர் (களிறு) அவனைக் கொன்றுவிட்டார்.

‘மேலும், அவர்கள் தொடர்ந்து நடந்தார்கள். அங்கே அவர்கள் இருவரும் கீழே விழ இருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே அவர் (களிரு), அதைச் செப்பனிட்டு நிறுத்திவைத்தார்கள்.’..

(பார்க்க: திருக்கர்ஆன் 18ஆம் அத்தியாயம்; 66-82 வசனங்கள்.)
‘வகான வராஅஹும் மலிக்குன்’ என்னும் வசனத்தை ‘வகான அமாமஹும் மலிக்குன்’ என்று (இன்னோர் ஓதல் முறைப்படி) இப்னு அப்பாஸ்(ரலி) ஓதியுள்ளார்கள்.
Book : 54

(புகாரி: 2728)

بَابُ الشُّرُوطِ مَعَ النَّاسِ بِالقَوْلِ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُ قَالَ: أَخْبَرَنِي يَعْلَى بْنُ مُسْلِمٍ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، – يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ – وَغَيْرُهُمَا، قَدْ سَمِعْتُهُ يُحَدِّثُهُ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: إِنَّا لَعِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: حَدَّثَنِي أُبَيُّ بْنُ كَعْبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

مُوسَى رَسُولُ اللَّهِ – فَذَكَرَ الحَدِيثَ – {قَالَ أَلَمْ أَقُلْ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا} [الكهف: 72]، كَانَتِ الأُولَى نِسْيَانًا، وَالوُسْطَى شَرْطًا، وَالثَّالِثَةُ عَمْدًا، {قَالَ: لاَ تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ وَلاَ تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا} [الكهف: 73]، {لَقِيَا غُلاَمًا فَقَتَلَهُ} [الكهف: 74]، فَانْطَلَقَا، فَوَجَدَا {جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ، فَأَقَامَهُ} [الكهف: 77] ” قَرَأَهَا ابْنُ عَبَّاسٍ أَمَامَهُمْ مَلِكٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.