தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2733

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் பெண்களை (அவர்கள் இறை நம்பிக்கையுடையவர்கள் தாமா) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சோதித்து வந்தார்கள். இணைவைப்பவர்களின் மனைவிமார்களில் யாரெல்லாம் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களுக்காக, அவர்களின் கணவன்மார்கள் செலவிட்ட (மஹ்ர்) தொகைகளை அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடும்படியும், நிராகரிக்கும் பெண்களுடன் திருமணம் பந்தம் வைத்திருக்கக் கூடாது என்றும் அல்லாஹ் (குர்ஆனில் சட்டம் அருளி) முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டபோது, உமர்(ரலி), அபூ உமய்யாவின் மகள் கரீபாவையும், ஜர்வல் அல் குஸாயீயின் மகளையும் (அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால்) தலாக் செய்துவிட்டார்கள்.

எனவே, கரீபாவை முஆவியா இப்னு அபீ சுஃப்யானும் மற்றொருத்தியை (ஜர்வலின் மகளை) அபூ ஜஹ்மும் மணந்தார்கள். முஸ்லிம்கள் தங்கள் மனைவிமார்களுக்குச் செலவிட்டவற்றை (மஹ்ர் தொகையை) திருப்பிச் செலுத்துவதற்கு ஒப்புக் கொள்ள நிராகரிப்பவர்கள் மறுத்தபோது, ‘இறைநிராகரிப்பாளர்களான உங்கள் மனைவிமார்(கள் நிராகரிப்பாளர்களிடம் சென்று அவர்களின் மனைவிகளாகி விட்டிருக்கும் பட்சத்தில் அவர்)களுக்கு நீங்கள் கொடுத்திருந்த மஹ்ரில் சிறிதளவு அந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து உங்களுக்குக் கிடைக்க வில்லையாயின், பின்னர் உங்களுக்குப் போர்ச் செல்வங்கள் கிடைக்கும்போது உங்களில் யாருடைய மனைவிமார்கள் அங்கே சென்றார்களோ (அவர்களின்) அந்தக் கணவன்மார்களுக்கு அவர்கள் வழங்கிய மஹ்ருக்குச் சமமான தொகையைக் கொடுத்து விடுங்கள்’ (திருக்குர்ஆன் 60:11) என்னும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

ஹிஜ்ரத் செய்து வந்த (இறைநம்பிக்கை கொண்ட) பெண்களில் எவருமே அதன் பின்னர் இஸ்லாத்தை நிராகரித்து (மதம் மாறிச்) சென்றதாக நாங்கள் அறியவில்லை. சமாதான உடன்படிக்கைக் காலத்தில் அபூ பஸீர் இப்னு உசைத் அஸ் ஸகஃபீ அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்தவராக நபி(ஸல்) அவர்களிடம் வந்ததாகவும் (குறைஷித் தலைவர்) அக்னஸ் இப்னு ஷுரைக் என்பவர் அபூ பஸீரை (மக்காவுக்குத்) திருப்பியனுப்பும் படி கேட்டு, நபி(ஸல்) அவர்களுக்கு (கடிதம்) எழுதியதாகவும் எங்களுக்குச் செய்தி எட்டிற்று.’.. என்று ஹதீஸ் முழுவதையும் சொன்னார்கள்.
Book :54

(புகாரி: 2733)

وَقَالَ عُقَيْلٌ عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ: فَأَخْبَرَتْنِي عَائِشَةُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَمْتَحِنُهُنَّ وَبَلَغْنَا أَنَّهُ لَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى: أَنْ يَرُدُّوا إِلَى المُشْرِكِينَ مَا أَنْفَقُوا عَلَى مَنْ هَاجَرَ مِنْ أَزْوَاجِهِمْ، وَحَكَمَ عَلَى المُسْلِمِينَ أَنْ لاَ يُمَسِّكُوا بِعِصَمِ الكَوَافِرِ، أَنَّ عُمَرَ طَلَّقَ امْرَأَتَيْنِ، قَرِيبَةَ بِنْتَ أَبِي أُمَيَّةَ، وَابْنَةَ جَرْوَلٍ الخُزَاعِيِّ، فَتَزَوَّجَ قَرِيبَةَ مُعَاوِيَةُ، وَتَزَوَّجَ الأُخْرَى أَبُو جَهْمٍ، فَلَمَّا أَبَى الكُفَّارُ أَنْ يُقِرُّوا بِأَدَاءِ مَا أَنْفَقَ المُسْلِمُونَ عَلَى أَزْوَاجِهِمْ، أَنْزَلَ اللَّهُ تَعَالَى: {وَإِنْ فَاتَكُمْ شَيْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الكُفَّارِ فَعَاقَبْتُمْ} [الممتحنة: 11] وَالعَقْبُ مَا يُؤَدِّي المُسْلِمُونَ إِلَى مَنْ هَاجَرَتِ امْرَأَتُهُ مِنَ الكُفَّارِ، فَأَمَرَ أَنْ يُعْطَى مَنْ ذَهَبَ لَهُ زَوْجٌ مِنَ المُسْلِمِينَ مَا أَنْفَقَ مِنْ صَدَاقِ نِسَاءِ الكُفَّارِ اللَّائِي هَاجَرْنَ، وَمَا نَعْلَمُ أَنَّ أَحَدًا مِنَ الْمُهَاجِرَاتِ ارْتَدَّتْ بَعْدَ إِيمَانِهَا، وَبَلَغَنَا أَنَّ أَبَا بَصِيرِ بْنَ أَسِيدٍ  الثَّقَفِيَّ قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤْمِنًا مُهَاجِرًا فِي المُدَّةِ، فَكَتَبَ الأَخْنَسُ بْنُ شَرِيقٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ أَبَا بَصِيرٍ، فَذَكَرَ الحَدِيثَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.