மரண சாசனங்கள்
பாடம் : 1 மரண சாசனங்களும், மனிதனின் மரண சாசனம் எழுதப்பட்டு அவனிடம் (ஆவண வடிவில்) இருக்க வேண்டும் என்னும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும்.
அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் ஒருவருக்கு மரணம் வரும் போது அவர் செல்வம் எதையேனும் விட்டுச் சென்றால் அவர் தம் தாய் தந்தைக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் ((வழக்கிலுள்ள) நியாயமான முறைப்படி மரண சாசனம் (வஸிய்யத்) செய்ய வேண்டும் என்று உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இறையச்சமுடையவர்கள் மீது இது கடமையாகும்.
யாரேனும் அதைக் கேட்டு, பின்னர் அதை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் அதை மாற்றுகின்றவர்கள் மீது தான் சாரும். நிச்சயமாக, அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
மரண சாசனம் செய்தவர் தெரிந்தோ தெரியாமலோ அநீதி செய்து விட்டார் என்று எவராவது அஞ்சி சம்பந்தப்பட்டவர்களிடையே (நடுவராகச் செயல்பட்டு) சமாதானம் செய்து வைத்து விடுவாராயின் (அவ்விதம் செய்ததில்) அவர் மீது குற்றமேதுமில்லை. நிச்சயமாக, அல்லாஹ் மன்னிப்பவனும் அருள் புரிபவனும் ஆவான். (2:180)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவர்களிடமிருந்து அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களும் இவ்வாறே அறிவித்தார்கள்.
Book : 55
55 – كِتَابُ الوَصَايَا
بَابُ الوَصَايَا وَقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَصِيَّةُ الرَّجُلِ مَكْتُوبَةٌ عِنْدَهُ»
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ المَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا، الوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى المُتَّقِينَ، فَمَنْ بَدَّلَهُ بَعْدَ مَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ، إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ، فَمَنْ خَافَ مِنْ مُوصٍ جَنَفًا أَوْ إِثْمًا، فَأَصْلَحَ بَيْنَهُمْ، فَلاَ إِثْمَ عَلَيْهِ، إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ} ” جَنَفًا: مَيْلًا مُتَجَانِفٌ مَائِلٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«مَا حَقُّ امْرِئٍ مُسْلِمٍ لَهُ شَيْءٌ يُوصِي فِيهِ، يَبِيتُ لَيْلَتَيْنِ إِلَّا وَوَصِيَّتُهُ مَكْتُوبَةٌ عِنْدَهُ»
تَابَعَهُ مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ، عَنْ عَمْرٍو، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்