பாடம் : 12 வக்ஃபு செய்தவர் தமது வக்ஃபுச் சொத்தினால் (அறக் கொடையினால்) பயனடையலாமா?
உமர் (ரலி) அவர்கள் (கைபரில் தமக்குக் கிடைத்த நிலத்தை வக்ஃபு செய்த போது), அதை நிர்வகிப்பவர் அதிலிருந்து உண்பதில் தவறில்லை என்ற நிபந்தனையைச் சேர்த்தார்கள். மேலும், வக்ஃபு செய்தவரே கூட அதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். அவரல்லாத பிறரும் நிர்வாகப் பொறுப்பை ஏற்கலாம். இவ்வாறே எவரெல்லாம் ஓர் ஒட்டகத்தையோ வேறெந்தப் பொருளையோ அல்லாஹ்வுக்காகக் கொடுத்து விடுகின்றாரோ அதிலிருந்து மற்றவர்கள் பயனடைவதைப் போலவே, அவரும் பயனடையலாம்; அவ்விதம் (தான் பயனடைய அனுமதிக்க வேண்டும் என்று) அவர் நிபந்தனையிடா விட்டாலும் சரியே.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தியாக ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு வந்த ஒரு மனிதரைக் கண்டு, ‘அதில் நீ ஏறிக் கொள்’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இது குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகம்’ என்று கூறினார். (இவ்விதம் மூன்று முறை திரும்பத் திரும்பக் கூறியும் அவர் அதில் ஏறவில்லை.) (எனவே) நான்காவது முறையில், ‘உனக்குக் கேடுண்டாகட்டும். அல்லது அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். அதில் நீ ஏறிக் கொள்’ என்று கூறினார்கள்.
Book : 55
بَابٌ: هَلْ يَنْتَفِعُ الوَاقِفُ بِوَقْفِهِ؟
وَقَدْ اشْتَرَطَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «لاَ جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهُ أَنْ يَأْكُلَ مِنْهَا» وَقَدْ يَلِي الوَاقِفُ وَغَيْرُهُ، وَكَذَلِكَ كُلُّ مَنْ جَعَلَ بَدَنَةً أَوْ شَيْئًا لِلَّهِ، فَلَهُ أَنْ يَنْتَفِعَ بِهَا كَمَا يَنْتَفِعُ غَيْرُهُ، وَإِنْ لَمْ يَشْتَرِطْ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ لَهُ: «ارْكَبْهَا»، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا بَدَنَةٌ، قَالَ فِي الثَّالِثَةِ أَوْ فِي الرَّابِعَةِ: «ارْكَبْهَا وَيْلَكَ، أَوْ وَيْحَكَ»
சமீப விமர்சனங்கள்