தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2775

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 பிராணிகள், கால்நடைகள், சாமான்கள் மற்றும் பணம் ஆகியவற்றை வக்ஃப் செய்வது (செல்லும்)

ஒருவர் ஆயிரம் தீனார்களை (தங்க நாணயங்களை) அல்லாஹ்வின் பாதையில் வக்ஃபு செய்து, அதை வியாபாரியான தனது பணியாள் ஒருவனிடம் தந்து (அதை முதலீடு செய்து) வியாபாரம் செய்யும்படி கூறி, அதன் இலாபத்தை ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும் தருமம் செய்கிறார்.

இந்த மனிதர் அந்த ஆயிரம் தீனார்களின் வாயிலாகக் கிடைக்கும் இலாபத்திலிருந்து கொஞ்சம் தானும் உண்ணலாமா? அவர் (தருமத்துக்குரியவர்களைக் குறிப்பிடும் போது) ஏழைஎளியவர்களுக்கு தருமம் செய்யும் படி குறிப்பிடவில்லையென்றாலும் கூட அதிலிருந்து உண்ண அவருக்கு அனுமதி யுண்டா? என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள், அதிலிருந்து உண்பதற்கு அவருக்கு அனுமதியில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) தமக்குச் சொந்தமான குதிரை ஒன்றின் மீது ஒரு மனிதரை ஏற்றி இறைவழியில் (போரிடுவதற்காக தருமம் செய்து) அனுப்பி வைத்தார்கள். அந்த குதிரையை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அந்த மனிதர் அதை விற்பதற்காக (சந்தையில்) நிறுத்தி வைத்திருப்பதாக உமர்(ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

உடனே அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் அந்த குதிரையைத் தாமே வாங்கிக் கொள்ள (அனுமதி) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதை நீங்கள் வாங்க வேண்டாம்; உங்கள் தருமத்தை ஒருபோதும் திரும்பப் பெற வேண்டாம்’ என்று கூறினார்கள்.
Book : 55

(புகாரி: 2775)

بَابُ وَقْفِ الدَّوَابِّ وَالكُرَاعِ وَالعُرُوضِ وَالصَّامِتِ

وَقَالَ الزُّهْرِيُّ: فِيمَنْ جَعَلَ أَلْفَ دِينَارٍ فِي سَبِيلِ اللَّهِ وَدَفَعَهَا إِلَى غُلاَمٍ لَهُ تَاجِرٍ يَتْجِرُ بِهَا، وَجَعَلَ رِبْحَهُ صَدَقَةً لِلْمَسَاكِينِ وَالأَقْرَبِينَ، هَلْ لِلرَّجُلِ أَنْ يَأْكُلَ مِنْ رِبْحِ ذَلِكَ الأَلْفِ شَيْئًا وَإِنْ لَمْ يَكُنْ جَعَلَ رِبْحَهَا صَدَقَةً فِي المَسَاكِينِ، قَالَ: «لَيْسَ لَهُ أَنْ يَأْكُلَ مِنْهَا»

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ عُمَرَ حَمَلَ عَلَى فَرَسٍ لَهُ فِي سَبِيلِ اللَّهِ أَعْطَاهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَحْمِلَ عَلَيْهَا رَجُلًا، فَأُخْبِرَ عُمَرُ أَنَّهُ قَدْ وَقَفَهَا يَبِيعُهَا، فَسَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَبْتَاعَهَا، فَقَالَ: «لاَ تَبْتَعْهَا، وَلاَ تَرْجِعَنَّ فِي صَدَقَتِكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.