தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2780

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கி, அவர் மரண சாசனம் செய்யும் நேரத்தில் அதைப் பற்றி இருவர் சாட்சியம் அளிக்க வேண்டும்; (அதற்கான விதிமுறைகளாவன:) உங்களிடையே நேர்மையான இருவர் சாட்சிகளாக்கப்பட வேண்டும். அல்லது நீங்கள் பயணத்தில் இருக்கும் பொழுது மரணத் துன்பம் (முஸ்லிம் களாகிய) உங்களை அணுகி விட்டால் உங்களைத் தவிர வேறு இருவரை சாட்சிகளாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். (சாட்சிகள் குறித்து) நீங்கள் சந்தேகப் பட்டால் தொழுகைக்குப் பிறகு (பள்ளிவாசலில்) அவர்களை நீங்கள் நிறுத்தி வைக்க,அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு,

நாங்கள் எங்கள் சாட்சியத்தை விலைக்கு விற்க மாட் டோம்; அதனால் எங்கள் உறவினர்கள் பலனடைவதாயிருப்பினும் சரியே! மேலும், அல்லாஹ்வுக்கு அளிக்க வேண்டிய சாட்சியத்தை மறைக்க மாட்டோம். அப்படி மறைத்தால் நாங்கள் பாவிகளாவோம் என்று கூறட்டும். ஆனால், (இதற்குப் பிறகும்) அவர்கள் பொய் சாட்சியம் கூறி பாவத்திற்காளாகி விட்டார்கள் என்று கண்டுபிடிக்கப் பட்டால், தமது உரிமை பாதிக்கப்பட்ட (இறந்த)வர்(களின் உறவினர்)களிலிருந்து தகுதி வாய்ந்த இருவர் எழுந்து அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, எங்கள் சாட்சியமே அவர்கள் இருவரின் சாட்சியத்தை விட வாய்மையானது. நாங்கள் (சாட்சியம் அளிப்பதில்) வரம்பு மீறவில்லை. அப்படி வரம்பு மீறினால் நாங்கள் அக்கிரமக்காரர்களாவோம் என்று கூற வேண்டும்.

அவர்கள் சரியான முறையில் சாட்சியம் அளிப்பதற்கு, அல்லது தம் சத்தியப் பிரமாணங்களுக்குப் பிறகு (பிறருடைய பிரமாணங்கள் வாங்கப்படுமோ அல்லது தமது சத்தியப் பிரமாணங்கள் சரியில்லை என்று) மறுக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி (உண்மையாக) சாட்சியமளிப்பதற்கு இதுவே பொருத்தமான வழிமுறையாகும். மேலும், அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்குச் செவிசாயுங்கள்; அல்லாஹ் (தன் கட்டளைக்கு) மாறுசெய்பவர்களுக்கு நேர்வழியளிப்பதில்லை. (5:106,107)

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பனூ சஹ்ம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் தமீமுத்தாரீ, அதீ இப்னு பத்தா ஆகியோருடன் பயணம் புறப்பட்டார், அந்த சஹ்ம் குலத்தவர் ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஒரு பூமியில் இறந்துவிட்டார். தமீமுத் தாரீயும், அதீயும் அவர் விட்டுச் சென்ற (அவருடைய) சொத்துக்களை எடுத்துக் கொண்டு வந்தபோது (அவற்றில்) தங்கத்தால் செதுக்கிய வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளிப்பாத்திரம் ஒன்றைக் காணவில்லை.

இறைத்தூதர்(ஸல்) அவ்விருவரிடமும் சத்தியப் பிரமாணம் வாங்கினார்கள். பிறகு அந்தப் பாத்திரம் மக்காவில் சிலரிடம் காணப்பட்டது. அவர்கள், ‘நாங்கள் இதை தமீமிடமிருந்தும் அதீயிடமிருந்தும் வாங்கினோம்’ என்று கூறினர். அப்போது (இறந்த) சஹ்ம் குலத்தவரின் (நெருங்கிய) உறவினர்களில் இருவர் எழுந்து சத்தியம் செய்து, ‘எங்கள் சாட்சியம் அவர்கள் இருவருடைய சாட்சியத்தை விட அதிகத் தகுதி வாய்ந்ததாகும்; (ஏற்கத் தக்கதாகும்)’ என்றும், ‘அந்தப் பாத்திரம் எங்கள் தோழருடையதே’ என்றும் கூறினர். அவர்களின் விவகாரத்தில் தான் இந்த (திருக்குர்ஆன் 05:106, 107) இறைவசனம் அருளப்பட்டது.
Book : 55

(புகாரி: 2780)

بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى: ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ، إِذَا حَضَرَ أَحَدَكُمُ المَوْتُ حِينَ الوَصِيَّةِ اثْنَانِ ذَوَا عَدْلٍ مِنْكُمْ، أَوْ آخَرَانِ مِنْ غَيْرِكُمْ إِنْ أَنْتُمْ ضَرَبْتُمْ فِي الأَرْضِ، فَأَصَابَتْكُمْ مُصِيبَةُ المَوْتِ تَحْبِسُونَهُمَا مِنْ بَعْدِ الصَّلاَةِ، فَيُقْسِمَانِ بِاللَّهِ إِنِ ارْتَبْتُمْ لاَ نَشْتَرِي بِهِ ثَمَنًا، وَلَوْ كَانَ ذَا قُرْبَى، وَلاَ نَكْتُمُ شَهَادَةَ اللَّهِ إِنَّا إِذًا لَمِنَ الآثِمِينَ، فَإِنْ عُثِرَ عَلَى أَنَّهُمَا اسْتَحَقَّا إِثْمًا، فَآخَرَانِ يَقُومَانِ مَقَامَهُمَا مِنَ الَّذِينَ اسْتُحِقَّ عَلَيْهِمُ الأَوْلَيَانِ، فَيُقْسِمَانِ بِاللَّهِ لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا، وَمَا اعْتَدَيْنَا إِنَّا إِذًا لَمِنَ الظَّالِمِينَ، ذَلِكَ أَدْنَى أَنْ يَأْتُوا بِالشَّهَادَةِ عَلَى وَجْهِهَا، أَوْ يَخَافُوا أَنْ تُرَدَّ أَيْمَانٌ بَعْدَ أَيْمَانِهِمْ، وَاتَّقُوا اللَّهَ وَاسْمَعُوا وَاللَّهُ لاَ يَهْدِي القَوْمَ الفَاسِقِينَ) {الأَوْلَيَانِ} [المائدة: 107] وَاحِدُهُمَا أَوْلَى وَمِنْهُ أَوْلَى بِهِ، عُثِرَ: أُظْهِرَ {أَعْثَرْنَا} [الكهف: 21] أَظْهَرْنَا

وَقَالَ لِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي القَاسِمِ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

خَرَجَ رَجُلٌ مِنْ بَنِي سَهْمٍ مَعَ تَمِيمٍ الدَّارِيِّ، وَعَدِيِّ بْنِ بَدَّاءٍ، فَمَاتَ السَّهْمِيُّ بِأَرْضٍ لَيْسَ بِهَا مُسْلِمٌ، فَلَمَّا قَدِمَا بِتَرِكَتِهِ، فَقَدُوا جَامًا مِنْ فِضَّةٍ مُخَوَّصًا مِنْ ذَهَبٍ، «فَأَحْلَفَهُمَا رَسُولُ اللَّهِ صلّى الله عليه  وسلم»، ثُمَّ وُجِدَ الجَامُ بِمَكَّةَ، فَقَالُوا: ابْتَعْنَاهُ مِنْ تَمِيمٍ وَعَدِيٍّ، فَقَامَ رَجُلاَنِ مِنْ أَوْلِيَائِهِ، فَحَلَفَا لَشَهَادَتُنَا أَحَقُّ مِنْ شَهَادَتِهِمَا، وَإِنَّ الجَامَ لِصَاحِبِهِمْ، قَالَ: وَفِيهِمْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا شَهَادَةُ بَيْنِكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ المَوْتُ} [المائدة: 106]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.