ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன்.
(ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள். அந்த இறைவசனம் இதுதான்:
அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
Book :56
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، أُرَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
«نَسَخْتُ الصُّحُفَ فِي المَصَاحِفِ، فَفَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الأَحْزَابِ كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهَا، فَلَمْ أَجِدْهَا إِلَّا مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ الَّذِي جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ»، وَهُوَ قَوْلُهُ: {مِنَ المُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ} [الأحزاب: 23]
அபூகுஸைமா (ரலி) பொய்சாட்சி சொன்னதாக தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி ஹதீஸை மறுக்கிறது அதை நீங்கள் பலமான செய்தி என்று போட்டுள்ளீர்கள்.?
நீங்கள் குறிப்பிட்ட கட்டுரையில்
//நபியவர்களுக்காக கண்ணால் காணாத ஒன்றைக் கண்டதாக குஸைமா (ரலி) சாட்சி கூறினார் என்று வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது, குர்ஆனுக்கு எதிரானது. இதனை ஏற்றுக் கொள்வது கூடாது//
உண்மையில் நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளராக இருந்திருந்தால்
//Bukhari-2807
ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது//
என்று ஏன் மாற்றினீர்கள் இதையும் குர்ஆனுக்கு முரண் என்று மறுக்கவேண்டிய ஹதீஸ் தானே அதுவும்? ஏன் ஆய்வில் உள்ளது என்று போட்டுள்ளீர்கள் ?
விளக்கம் தரவும்
அஸ்ஸலாமு அலைக்கும். தற்போது ஹதீஸ்களை பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. எழுத்துப்பிழைகள், தரம் பற்றிய தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால், அதற்கு முன்னுரிமை தரப்படும். ஒரு ஹதீஸ் ஆய்விற்கு பல நாட்கள் தேவைப்படும். எனவே, விரிவான ஆய்வுகள், விமர்சனங்கள் பற்றிய செய்திகளுக்கு பிறகு பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ், எந்தக் கேள்வியும் பதில் அளிக்காமல் விடப்படாது. ஒத்துழைப்பு தாருங்கள். உங்கள் ஒத்துழைப்பு இன்றி எங்களால் இந்த பணியை சரியாக செய்ய முடியாது. ஸலாம்.