தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2812

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 அல்லாஹ்வின் பாதையில் (போராடும் போது) தலையில் படிந்த புழுதியைத் துடைப்பது.

 இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும், அவரின் மகன் அலீயிடமும், ‘அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவரின் ஹதீஸைச் செவிமடுங்கள்’ என்று கூறினார்கள். எனவே, அபூ ஸயீத்(ரலி) அவர்களும் அவர்களின் (பால்குடிச்) சகோதரரும் தங்கள் தோட்டம் ஒன்றுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது நாங்களிருவரும் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) எங்களைப் பார்த்தவுடன் முழங்கால்களைக் கைகளால் கட்டிப்பிடித்தபடி அமர்ந்தார்கள். பிறகு கூறலானார்கள்;

நாங்கள் (மஸ்ஜிதுந் நபவி) பள்ளிவாசலின் செங்கற்களை ஒவ்வொன்றாக (சுமந்து) கொண்டு சென்றோம். அம்மார் இரண்டிரண்டு செங்கற்களாக (சுமந்து) கொண்டு சென்றார். அப்போது அவரை நபி(ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அவரின் தலையிலிருந்து புழுதியைத் துடைத்துவிட்டு, ‘பாவம் அம்மார்! அம்மாரை ஒரு கலகக் கூட்டத்தினர் கொன்று விடுவார்கள். அம்மார், அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தினர் அவரை நரக நெருப்பின் பக்கம் அழைத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 56

(புகாரி: 2812)

بَابُ مَسْحِ الغُبَارِ عَنِ الرَّأْسِ فِي سَبِيلِ اللَّهِ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، قَالَ لَهُ وَلِعَلِيِّ بْنِ عَبْدِ اللَّهِ

ائْتِيَا أَبَا سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ، فَأَتَيْنَاهُ وَهُوَ وَأَخُوهُ فِي حَائِطٍ لَهُمَا يَسْقِيَانِهِ، فَلَمَّا رَآنَا جَاءَ، فَاحْتَبَى وَجَلَسَ، فَقَالَ: كُنَّا نَنْقُلُ لَبِنَ المَسْجِدِ لَبِنَةً لَبِنَةً، وَكَانَ عَمَّارٌ يَنْقُلُ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَسَحَ عَنْ رَأْسِهِ الغُبَارَ، وَقَالَ: «وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الفِئَةُ البَاغِيَةُ، عَمَّارٌ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.