தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2825

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 போருக்குச் செல்வது கடமையாகும் என்பதும், அறப்போரில் கடமையான அளவு எது என்பதும், அதற்காக நாட்டம் கொள்வதும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நீங்கள் கனமானவர்களாயிருந்தாலும் சரி; இலேசானவர்களாகயிருந்தாலும் சரி (அறப்போருக்குப்) புறப்படுங்கள்; உங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள். நீங்கள் அறிந்திருப்பீர்களாயின் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

உடனடி லாபம் (போர்ச் செல்வம்) கிடைப்பதாக இருந்து, இலேசான பயணமாகவும் இருந்திருப்பின் (நபியே!) உங்களை அவர்கள் பின்பற்றி வந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் பயணம் தூரமாகி (சிரமமாகி) விட்டது. (9:41,42)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அல்லாஹ்வின் பாதையில் புறப்படுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால் பூமியிலேயே ஒட்டிக் கொண்டு கிடக்கின்றீர்களே! மறுமையை விட இவ்வுலக வாழ்வில் திருப்தி கொண்டு விட்டீர்களா? (அப்படியாயின்) உலக வாழ்வின் இன்பங்கள் யாவும் மறுமை வாழ்க்கைக்கு முன்பாக அற்பமானவையே (என்பதை அறிந்து கொள்ளுங்கள்). (9:38)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பல குழுவினர்களாகப் புறப்படுங்கள் (4:71) என்பதற்கு, (தனித் தனியாகிப் பிரிந்து செல்லும்) பல படையணிகளாகப் புறப்படுங்கள் என்று பொருள் எனக் கூறினார்கள்.

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில், ‘(மக்காவின்) வெற்றிக்குப் பின்பு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் என்பது கிடையாது; ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போருக்காகப் புறப்படும்படி (உங்கள் தலைவரின் தரப்பிலிருந்து) கோரப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 56

(புகாரி: 2825)

بَابُ وُجُوبِ النَّفِيرِ، وَمَا يَجِبُ مِنَ الجِهَادِ وَالنِّيَّةِ

وَقَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {انْفِرُوا خِفَافًا وَثِقَالًا، وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ، لَوْ كَانَ عَرَضًا قَرِيبًا، وَسَفَرًا قَاصِدًا لاَتَّبَعُوكَ، وَلَكِنْ بَعُدَتْ عَلَيْهِمُ الشُّقَّةُ وَسَيَحْلِفُونَ بِاللَّهِ} [التوبة: 42] الآيَةَ

وَقَوْلِهِ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمْ انْفِرُوا فِي سَبِيلِ اللَّهِ اثَّاقَلْتُمْ إِلَى الأَرْضِ، أَرَضِيتُمْ بِالحَيَاةِ الدُّنْيَا مِنَ الآخِرَةِ} [التوبة: 38] إِلَى قَوْلِهِ {عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ} [البقرة: 20] يُذْكَرُ عَنْ ابْنِ عَبَّاسٍ: {انْفِرُوا ثُبَاتٍ} سَرَايَا مُتَفَرِّقِينَ ” يُقَالُ: أَحَدُ الثُّبَاتِ ثُبَةٌ

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ الفَتْحِ: «لاَ هِجْرَةَ بَعْدَ الفَتْحِ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.