தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2847

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41

ஒற்றர் படையைத் தனியாக அனுப்பலாமா?

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) கூறினார்.

(உளவுப் பணிக்காக) நபி(ஸல்) மக்களை அழைத்தார்கள். ‘அது அகழ்ப் போரின்போது என்று நினைக்கிறேன்’ என அறிவிப்பாளர் ஸதகா இப்னு ஃபள்ல்(ரஹ்) கூறினார். – ஸுபைர்(ரலி) (அதற்குத் தாம் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மக்களை (எதிரிகளை வேவு பார்த்து வரும்படி) அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர்(ரலி) (அதற்குத் தாம் தாயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் மக்களை அழைத்தார்கள்; அப்போதும் ஸுபைர்(ரலி) (தாம் அதற்குத் தயாராக இருப்பதாக) பதிலளித்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒவ்வோர் இறைத்தூதருக்கும் பிரத்யேகமான தூய தோழர் ஒருவர் நிச்சயம் உண்டு. என் பிரத்யேகமான தூய தோழர் அவ்வாமின் மகன் ஸுபைராவார்’ என்று கூறினார்கள்.
Book : 56

(புகாரி: 2847)

بَابٌ: هَلْ يُبْعَثُ الطَّلِيعَةُ وَحْدَهُ؟

حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا ابْنُ المُنْكَدِرِ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

نَدَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ – قَالَ صَدَقَةُ: أَظُنُّهُ يَوْمَ الخَنْدَقِ – فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ النَّاسَ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، ثُمَّ نَدَبَ النَّاسَ، فَانْتَدَبَ الزُّبَيْرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا وَإِنَّ حَوَارِيَّ الزُّبَيْرُ بْنُ العَوَّامِ»





5 comments on Bukhari-2847

  1. Last Updated on June 1, 2020 by allah
    இது பேன்று நிறைய ஹதீல் அல்லாவினால் புதுப்பிக்கப்பட்டதாக உள்ளது.
    சறி செய்யவும்.

      1. அஸ்ஸலாமு அலைக்கும்.

        சகோதரரே! நீங்கள் by allah என்று இருப்பதை நீங்கள் மாற்ற சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதில் பணிசெய்யும் ஒருவரின் யூஸர் நேமாக இருக்கலாம். இன்ஷா அல்லாஹ் சரி செய்கிறோம்.

          1. அஸ்ஸலாமு அலைக்கும்.

            by allah என்று இருப்பதை சரிசெய்து விட்டோம். மீண்டும் அதுபோன்று கண்டால் தெரியப்படுத்தவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.