தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2853

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்காக) குதிரையைத் தயாராக வைத்திருப்பதின் சிறப்பு.

ஏனெனில் அல்லாஹ், மேலும் அவர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பலத்தையும் (போருக்குத்) தயாராக உள்ள குதிரைகளையும் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள் (8:60) என்று கூறுகிறான்.

 ‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டும் அவனுடைய வாக்குறுதியை நம்பியும் இறைவழியில் (போரிடுவதற்காக) ஒரு குதிரையப் கட்டி வைக்கிறவர், அதற்குப் போடுகிற தீனி, புகட்டுகிற தண்ணீர் மற்றும் அதன் சாணம், சிறுநீர் ஆகியவையும் (நன்மைகளாக) அவரின் தட்டில் (வைத்து எடை) போடப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 56

(புகாரி: 2853)

بَابُ مَنِ احْتَبَسَ فَرَسًا ” فِي سَبِيلِ اللَّهِ

لِقَوْلِهِ تَعَالَى: {وَمِنْ رِبَاطِ الخَيْلِ} [الأنفال: 60]

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا ابْنُ المُبَارَكِ، أَخْبَرَنَا طَلْحَةُ بْنُ أَبِي سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدًا المَقْبُرِيَّ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«مَنِ احْتَبَسَ فَرَسًا فِي سَبِيلِ اللَّهِ إِيمَانًا بِاللَّهِ وَتَصْدِيقًا بِوَعْدِهِ، فَإِنَّ شِبَعَهُ وَرِيَّهُ وَرَوْثَهُ وَبَوْلَهُ فِي مِيزَانِهِ يَوْمَ القِيَامَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.