பாடம் : 46 குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும் பிரத்யேகப் பெயர் சூட்டுவது.
அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில் மக்காவுக்குப்) புறப்பட்டேன். (வழியில்) என்னுடைய தோழர்கள் சிலருடன் நான் பின்தங்கி விட்டேன். அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்; நான் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. என் தோழர்கள் நான் பார்ப்பதற்கு முன்னால் ஒரு காட்டுக் கழுதையைப் பார்த்தார்கள். அதைப் பார்த்த பொழுது அதை நானாகப் பார்க்கட்டும் என்றுவிட்டுவிட்டார்கள்.
(நான் அதைப் பார்த்தவுடன்) ‘ஜராதா’ என்றழைக்கப்பட்ட என்னுடைய குதிரையின் மீது ஏறிக் கொண்டு என் தோழர்களிடம் என்னுடைய சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அதை (எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். எனவே, நான் அதை எடுத்து (அந்தக் காட்டுக் கழுதையைத்) தாக்கி, அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன். பிறகு (அதை அறுத்து) நான் உண்டேன்; அவர்களும் உண்டார்கள். பிறகு (அதை உண்டதற்காக) வருந்தினார்கள்.
அவர்கள் நபி(ஸல்) அவர்களை அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘அதிலிருந்து ஏதேனும் (ஒரு பகுதி இறைச்சி) உங்களிடம் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். ‘அதனுடைய கால் எங்களிடம் இருக்கிறது’ என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அதை எடுத்து உண்டார்கள்.
Book : 56
بَابُ اسْمِ الفَرَسِ وَالحِمَارِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ
أَنَّهُ خَرَجَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَتَخَلَّفَ أَبُو قَتَادَةَ مَعَ بَعْضِ أَصْحَابِهِ، وَهُمْ مُحْرِمُونَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَوْا حِمَارًا وَحْشِيًّا قَبْلَ أَنْ يَرَاهُ، فَلَمَّا رَأَوْهُ تَرَكُوهُ حَتَّى رَآهُ أَبُو قَتَادَةَ، فَرَكِبَ فَرَسًا لَهُ يُقَالُ لَهُ الجَرَادَةُ، فَسَأَلَهُمْ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا، فَتَنَاوَلَهُ، فَحَمَلَ فَعَقَرَهُ، ثُمَّ أَكَلَ، فَأَكَلُوا فَنَدِمُوا، فَلَمَّا أَدْرَكُوهُ قَالَ: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟»، قَالَ: مَعَنَا رِجْلُهُ، فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَهَا
சமீப விமர்சனங்கள்