பாடம் : 1 அறப்போர் மற்றும் அதன் வழிமுறைகளின் சிறப்பு.
அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, அல்லாஹ் இறை நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சொர்க்கத்திற்குப் பகரமாக வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றார்கள்; கொல்கிறார்கள்; கொல்லப்படுகின்றார்கள். அவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்னும் இந்த வாக்குறுதி அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள சத்தியமான வாக்குறுதியாகும்.
இது தான் தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகிய(வேத நூல்கள் எல்லா) வற்றிலும் உள்ளது. அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நன்கு நிறைவேற்றுபவர் வேறெவர் உள்ளார்? ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உங்கள் வியாபாரத்தைக் குறித்து மகிழ்ச்சியடையுங்கள்.
இதுவே மாபெரும் வெற்றி. (இந்த ஒப்பந்தம் செய்து கொண்ட நம்பிக்கையாளர்கள்) அல்லாஹ்விடம் திரும்பி பாவமன்னிப்புக் கோரிய வண்ணமிருப்பவர்களும், (அவனை) வணங்கி வாழ்பவர்களும், (அவனது) புகழை எடுத்துரைப்பவர்களும், அவனுக்காக (அவனது மார்க்கத்தைப் பிரசாரம் செய்திட) சுற்றித் திரிபவர்களும் அவன் முன்னால் குனிந்தும் சிரம் பணிந்தும் வணக்கம் புரிபவர்களும், நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பவர்களும் அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகளைப் பேணி நடப்பவர்களும் ஆவர். (இத்தகைய) நம்பிக்கையாளர்களுக்கு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள். (9:111,112)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த இறைவசனத்திலுள்ள ஹுதூத் என்னும் சொல்லுக்கு வணக்க வழிபாடுகள் என்று பொருள் கூறியுள்ளார்கள்.
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து குதிரைக்கு இரண்டு பங்குகளையும் (அதல்லாமல்) அதன் உரிமையாளருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.
மாலிக்(ரஹ்), ‘அரபு குதிரைகளுக்கும் பிற நாட்டு (ஐரோப்பிய குதிரைகளான) துருக்கிய குதிரைகளுக்கும் போரில் கிடைக்கும் செல்வங்களிலிருந்து பங்கு கொடுக்கப்பட வேண்டும்.
ஏனெனில், அல்லாஹ்,
‘குதிரைகளையும், கோவேறுக் கழுதைகளையும், கழுதைகளையும் நீங்கள் பயணம் செய்வதற்காக(வும் அலங்காரமாகவும்) படைத்தான்’ (திருக்குர்ஆன் 16:08) என்று கூறுகிறான். மேலும், ஒரு குதிரையை விட அதிகமானவற்றுக்குப் பங்கு தரக் கூடாது’ என்று கூறினார்கள்.
Book : 56
بَابُ سِهَامِ الفَرَسِ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ لِلْفَرَسِ سَهْمَيْنِ وَلِصَاحِبِهِ سَهْمًا»، وَقَالَ مَالِكٌ: ” يُسْهَمُ لِلْخَيْلِ وَالبَرَاذِينِ مِنْهَا، لِقَوْلِهِ: {وَالخَيْلَ وَالبِغَالَ وَالحَمِيرَ لِتَرْكَبُوهَا} [النحل: 8]، وَلاَ يُسْهَمُ لِأَكْثَرَ مِنْ فَرَسٍ
சமீப விமர்சனங்கள்