தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2894 & 2895

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 75

(அறப்போருக்காக) கடல் பயணம் செய்தல்

2894 & 2895. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் எனது இல்லத்தில் மதிய ஓய்வு எடுத்தார்கள்; பிறகு (உறக்கத்திலிருந்து) சிரித்தபடியே விழித்துக்கொண்டார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். ‘‘என் சமுதாயத்தாரில் ஒரு கூட்டத்தார் அரசர்கள் கட்டில்களில் அமர்ந்திருப்பதைப் போல் கடல் பயணம் செய்வதை (கனவில்) கண்டு நான் வியந்தேன். (அதனால்தான் சிரிக்கிறேன்)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் நீங்கள் துஆ செய்யுங்கள்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அவர்களில் ஒருவர்தான்” என்று கூறினார்கள். மீண்டும் உறங்கி, சிரித்தபடியே விழித்தெழுந்தார்கள். முன்பு கூறியதைப் போன்றே இரண்டு அல்லது மூன்றுமுறை கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என்று கூற, நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் (அறப்போருக்காகப் பயணம் செய்யும்) முதல் (படைக்) குழுவினரில் ஒருவராவீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு உம்மு ஹராம் (ரலி) அவர்களை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் மணந்துகொண்டார்கள். பின்னர் அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு (கடல் பயணம் செய்து) அறப்போருக்குச் சென்றார்கள். திரும்பி வரும் போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் ஏறி அமர்வதற்காக வாகனம் (கோவேறு கழுதை) ஒன்று அருகில் கொண்டுவரப்பட்டது. அப்போது அவர்கள் (அதிலிருந்து தவறிக்) கீழே விழுந்து அவர்களின் கழுத்து முறிந்துவிட்டது. (அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.)

அத்தியாயம்: 56

(புகாரி: 2894 & 2895)

بَابُ رُكُوبِ البَحْرِ

حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: حَدَّثَتْنِي أُمُّ حَرَامٍ:

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمًا فِي بَيْتِهَا، فَاسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَا يُضْحِكُكَ؟ قَالَ: «عَجِبْتُ مِنْ قَوْمٍ مِنْ أُمَّتِي يَرْكَبُونَ البَحْرَ كَالْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَقَالَ: «أَنْتِ مِنْهُمْ»، ثُمَّ نَامَ فَاسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ، فَقَالَ مِثْلَ ذَلِكَ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَيَقُولُ: «أَنْتِ مِنَ الأَوَّلِينَ»،

فَتَزَوَّجَ بِهَا عُبَادَةُ بْنُ الصَّامِتِ، فَخَرَجَ بِهَا إِلَى الغَزْوِ، فَلَمَّا رَجَعَتْ قُرِّبَتْ دَابَّةٌ لِتَرْكَبَهَا، فَوَقَعَتْ، فَانْدَقَّتْ عُنُقُهَا


Bukhari-Tamil-2894.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2894.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-2788 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.