தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2896

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 76

போரில் பலவீனர்கள், நல்லவர்கள் ஆகியோரின் காரணத்தால் உதவி கிடைப்பது.

அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(கிழக்கு ரோமானியப் பேரரசர்) கைஸர் (சீசர்) ‘‘நான் உங்களிடம், ‘அந்த நபியை மக்களில் உயர் வகுப்பினர் (வசதி வாய்ப்பும் அதிகாரமும் பெற்றுள்ள மேல்தட்டு மக்கள்) பின்பற்றுகிறார்களா? பலவீனர்களான (ஒடுக்கப்பட்ட) மக்கள் பின்பற்றுகிறார்களா? என்று கேட்டேன். அதற்கு, பலவீனர்களான (ஒடுக்கப்பட்ட) மக்கள்தான் (அவரைப் பின்பற்றுகிறார்கள்) என்று பதிலளித்தீர். (எப்போதும்) அவர்கள்தான் இறைத் தூதர்களைப் பின்பற்றக்கூடியவர்கள்” என்று என்னிடம் கூறினார். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்அப் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், (தம்முடைய வீரச் செயல்களின் காரணத்தால்) தமக்குப் பிறரைவிட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் எனக் கருதினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (இறைவனின்) உதவி வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 56

(புகாரி: 2896)

بَابُ مَنِ اسْتَعَانَ بِالضُّعَفَاءِ وَالصَّالِحِينَ فِي الحَرْبِ
وَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، ” قَالَ لِي قَيْصَرُ سَأَلْتُكَ: أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ، فَزَعَمْتَ ضُعَفَاءَهُمْ وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ ”

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، قَالَ:

رَأَى سَعْدٌ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ لَهُ فَضْلًا عَلَى مَنْ دُونَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلَّا بِضُعَفَائِكُمْ»


Bukhari-Tamil-2896.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-2896.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.