தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2914

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 88 ஈட்டியின் சிறப்பு பற்றி…..

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (போரில் கிடைக்கும் பொருள்களிலிருந்து எனக்குக் கிடைக்க வேண்டிய) எனது செல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீழே உள்ளது. எவர் என் கட்டளைக்கு மாறுசெய்கிறாரோ, அவர் மீது பணிந்திருப்பதும் ஜிஸ்யா-காப்புவரி செலுத்துவதும் கடமையாகும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்தபோது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கிவிட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை.

அப்போது காட்டுக் கழுதை ஒன்றை கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டு என் சகாக்களிடம் என்னுடைய சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் எடுத்துத் தர மறுத்தார்கள். பிறகு நானே அதை எடுத்துக் கொண்டு கழுதையின் மீது பாய்ச்சி அதைக் கொன்று விட்டேன். நபித் தோழர்களில் சிலர் அந்தக் கழுதையின் இறைச்சியை உண்டார்கள். மற்றும் சிலர் உண்ண மறுத்துவிட்டார்கள். அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அடைந்த பொழுது அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அது அல்லாஹ் உங்களுக்கு அளித்த உணவாகும்’ என்று பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘அதன் இறைச்சியில் மீதம் ஏதும் உங்களிடம் உண்டா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். என்று காணப்படுகிறது.
Book : 56

(புகாரி: 2914)

بَابُ مَا قِيلَ فِي الرِّمَاحِ

وَيُذْكَرُ عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جُعِلَ رِزْقِي تَحْتَ ظِلِّ رُمْحِي، وَجُعِلَ الذِّلَّةُ وَالصَّغَارُ عَلَى مَنْ خَالَفَ أَمْرِي»

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ الأَنْصَارِيِّ، عَنْ أَبِي قَتَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ، تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ، وَهُوَ غَيْرُ مُحْرِمٍ، فَرَأَى حِمَارًا وَحْشِيًّا، فَاسْتَوَى عَلَى فَرَسِهِ، فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ، فَأَبَوْا، فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا، فَأَخَذَهُ، ثُمَّ شَدَّ عَلَى الحِمَارِ، فَقَتَلَهُ، فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَى بَعْضٌ، فَلَمَّا أَدْرَكُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلُوهُ عَنْ ذَلِكَ، قَالَ: «إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ»

وَعَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي قَتَادَةَ: فِي الحِمَارِ الوَحْشِيِّ، مِثْلُ حَدِيثِ أَبِي النَّضْرِ قَالَ: هَلْ مَعَكُمْ مِنْ لَحْمِهِ شَيْءٌ؟





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.