தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2917

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(தருமம் செய்யாத) கஞ்சனுக்கும் தருமம் செய்பவனுக்கும் உவமை, இரும்பு அங்கிகள் அணிந்த இரண்டு மனிதர்கள் ஆவர். அவர்களின் கைகள் அவர்களின் கழுத்தெலும்புகளோடு ஒட்டியிருக்கும். (அந்த அளவிற்கு அவை இறுக்கமானவை.) தருமம் செய்பவர் தருமம் செய்ய நாடும்போது (அவர் அணிந்திருக்கும் அந்த) அங்கி அவருக்கு விசாலமாகி விடுகிறது. எந்த அளவிற்கென்றால் அவர் (நடந்து செல்லும்போது அது நீண்டு) அவரின் பாதச் சுவட்டை அது அழித்து விடுகிறது. (அதாவது, தருமம் அவரின் குற்றங்குறைகளை மறைத்து விடுகிறது.)

கஞ்சன் தருமம் செய்ய நாடும் போதெல்லாம் (அவனுடைய இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அடுத்த வளையத்தை நெருக்குகிறது; அவனை (தன் பாரத்தால்) அழுத்துகிறது. அவனுடைய இரண்டு கைகளும் கழுத்தெலும்புகளுடன் ஒட்டிக் கொள்கின்றன.

(இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
(இதை அறிவித்த போது) நபி(ஸல்) அவர்கள், ‘கஞ்சன் அந்த அங்கியை விசாலமாக்க முயற்சி செய்வான். ஆனால், அது விசாலமாகாது’ என்று (பலமுறை) சொன்னார்கள்.
Book :56

(புகாரி: 2917)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«مَثَلُ البَخِيلِ وَالمُتَصَدِّقِ مَثَلُ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، قَدِ اضْطَرَّتْ أَيْدِيَهُمَا إِلَى تَرَاقِيهِمَا، فَكُلَّمَا هَمَّ المُتَصَدِّقُ بِصَدَقَتِهِ اتَّسَعَتْ عَلَيْهِ حَتَّى تُعَفِّيَ أَثَرَهُ، وَكُلَّمَا هَمَّ البَخِيلُ بِالصَّدَقَةِ انْقَبَضَتْ كُلُّ حَلْقَةٍ إِلَى صَاحِبَتِهَا وَتَقَلَّصَتْ عَلَيْهِ، وَانْضَمَّتْ يَدَاهُ إِلَى تَرَاقِيهِ»، فَسَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «فَيَجْتَهِدُ أَنْ يُوَسِّعَهَا فَلاَ تَتَّسِعُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.