பாடம் : 96 முடியாலான செருப்பை அணிபவர்களுடன் போர் புரிவது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முடியாலான செருப்புகளை அணியும் ஒரு கூட்டத்தாருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது. தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போரிடாத வரை இறுதி நாள் ஏற்படாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:
அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றொரு வழியாக அறிவிக்கப்படுகிற ஓர் அறிவிப்பில், (‘தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்ற முகங்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தினருடன்’ என்னும் வாசகத்திற்கு முன்னால்).. ‘சிறிய கண்களும் சப்பை மூக்குகளும் கொண்ட’ என்னும் சொற்கள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன. Book : 56
(புகாரி: 2929)بَابُ قِتَالِ الَّذِينَ يَنْتَعِلُونَ الشَّعَرَ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
«لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمُ الشَّعَرُ، وَلاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا كَأَنَّ وُجُوهَهُمُ المَجَانُّ المُطْرَقَةُ»، قَالَ سُفْيَانُ وَزَادَ فِيهِ أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رِوَايَةً: «صِغَارَ الأَعْيُنِ، ذُلْفَ الأُنُوفِ، كَأَنَّ وُجُوهَهُمْ، المَجَانُّ المُطْرَقَةُ»
சமீப விமர்சனங்கள்