தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2930

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97 தோல்வியின் போது தன் தோழர்களை அணிவகுத்து நிற்கச் செய்து, தன் வாகனத்திலிருந்து இறங்கி அல்லாஹ்விடம் உதவி கோருவது.

 அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

பராஉ (ரலி) அவர்களிடம் ஒருமனிதர் அபூ உமாராவே! நீஙகள் ஹுனைன் போரின் போது பின்வாங்கி ஓடினீர்களா என்று கேட்க, அதற்கு அவர்கள், இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறமுதுகிட்டுச் செல்லவில்லை.

ஆயினும், அவர்களின் தோழர்களில் வாலிபர்களும் ஆயுத பலம் இல்லாதவர்களும் களைத்துப் போய் நிராயுத பாணிகளாக வெளியேறினர். அவர்கள் ஹவாஸின் மற்றும் பனூ நஸ்ர் சமுதாயத்தாரின் வில் வீரர்களைக் கடந்துச் சென்றனர். அவர்களுடைய எந்த அம்பும் இலக்குத் தவறி விழுவதில்லை. அவர்கள் குறித் தவறாமல் அம்புகளை எய்தார்கள்.

ஆகவே, முஸ்லிம்கள் மீண்டும் நபி (ஸல்) அவர்களை நோக்கி சென்றார்கள். அப்போது ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகன் அபூசுஃப்யான் பின் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் ஒட்டிக் கொண்டு வர அதன் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.

(செய்தி அறிந்ததும் அதை விட்டு,) இறங்கி அல்லாஹ்விடம் உதவிக் கோரி பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் இறைத்தூதர் தான் இது பொய் அல்ல. நான் அப்துல் முத்தலிபின் (மகனின்) மகன் ஆவேன் என்று கூறினார்கள். பிறகு, தம் தோழர்களை அணிவகுக்கச் செய்தார்கள்.
Book : 56

(புகாரி: 2930)

بَابُ مَنْ صَفَّ أَصْحَابَهُ عِنْدَ الهَزِيمَةِ، وَنَزَلَ عَنْ دَابَّتِهِ وَاسْتَنْصَرَ

حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ الحَرَّانِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ

سَمِعْتُ البَرَاءَ، وَسَأَلَهُ رَجُلٌ أَكُنْتُمْ فَرَرْتُمْ يَا أَبَا عُمَارَةَ يَوْمَ حُنَيْنٍ؟ قَالَ: لاَ وَاللَّهِ، مَا وَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَكِنَّهُ خَرَجَ شُبَّانُ أَصْحَابِهِ، وَأَخِفَّاؤُهُمْ حُسَّرًا لَيْسَ بِسِلاَحٍ، فَأَتَوْا قَوْمًا رُمَاةً، جَمْعَ هَوَازِنَ، وَبَنِي نَصْرٍ، مَا يَكَادُ يَسْقُطُ لَهُمْ سَهْمٌ، فَرَشَقُوهُمْ رَشْقًا مَا يَكَادُونَ يُخْطِئُونَ، فَأَقْبَلُوا هُنَالِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى بَغْلَتِهِ البَيْضَاءِ، وَابْنُ عَمِّهِ أَبُو سُفْيَانَ بْنُ الحَارِثِ بْنِ عَبْدِ المُطَّلِبِ يَقُودُ بِهِ، فَنَزَلَ وَاسْتَنْصَرَ، ثُمَّ قَالَ: «أَنَا النَّبِيُّ لاَ كَذِبْ، أَنَا ابْنُ عَبْدِ المُطَّلِبْ»، ثُمَّ صَفَّ أَصْحَابَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.