தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2938

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 (போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு கிடைக்கும் பங்கு.

 அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (பைஸாந்திய) ரோமர்களுக்கு (அழைப்புக்) கடிதம் எழுத விரும்பிய பொழுது, ‘அவர்கள் (அரசின்) முத்திரையிடப்பட்ட கடிதத்தைத் தவிர வேறெதையும் படிக்கமாட்டார்கள்’ என்று கூறப்பட்டது.

எனவே, நபி(ஸல்) அவர்கள் வெள்ளியாலான மோதிரம் (இலச்சினை) ஒன்றைத் தயாரித்தார்கள். (இப்போதும்) நான் அவர்களின் கரத்தில் அதன் வெண்மையைப் பார்ப்பது போன்றுள்ளது… அதில், ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ ‘இறைத்தூதர் முஹம்மது’ என்று நபி(ஸல்) அவர்கள் பொறித்திருந்தார்கள்.
Book : 56

(புகாரி: 2938)

بَابُ دَعْوَةِ اليَهُودِ وَالنَّصَارَى، وَعَلَى مَا يُقَاتَلُونَ عَلَيْهِ، وَمَا كَتَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى كِسْرَى، وَقَيْصَرَ، وَالدَّعْوَةِ قَبْلَ القِتَالِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ

لَمَّا أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ، قِيلَ لَهُ: إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلَّا أَنْ يَكُونَ مَخْتُومًا، «فَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، فَكَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِهِ فِي يَدِهِ، وَنَقَشَ فِيهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.