தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2939

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கடிதத்தை பாரசீக மன்னர் குஸ்ரூவுக்கு (அப்துல்லாஹ் இப்னு ஹுதஃபா அஸ் ஸஹ்மீ(ரலி) வாயிலாக) அனுப்பி வைத்தார்கள். அதை பஹ்ரைனுடைய ஆட்சியாளரிடம் கொடுத்து, அதை அவர் குஸ்ரூவிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லும் படி (அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா(ரலி) அவர்களுக்கு) உத்தரவிட்டார்கள்.

(அவ்வாறே அவர் அதைக் கொண்டு சென்று ஒப்படைக்க,) அதைப் பாரசீக மன்னன் குஸ்ரூ படித்தபோது, (கோபப்பட்டு) அதைக் கிழித்துவிட்டான்.
(எனவே,) ‘அவர்கள் துண்டு துண்டாக்கப்பட வேண்டும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள்’ என்று ஸயீத் இப்னு முஹய்யப்(ரஹ்) கூறினார்கள் என எண்ணுகிறேன்’ என்று அறிவிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.
Book :56

(புகாரி: 2939)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بِكِتَابِهِ إِلَى كِسْرَى، فَأَمَرَهُ أَنْ يَدْفَعَهُ إِلَى عَظِيمِ البَحْرَيْنِ، يَدْفَعُهُ عَظِيمُ البَحْرَيْنِ إِلَى كِسْرَى، فَلَمَّا قَرَأَهُ كِسْرَى حَرَّقَهُ، – فَحَسِبْتُ أَنَّ سَعِيدَ بْنَ المُسَيِّبِ قَالَ -: فَدَعَا عَلَيْهِمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ يُمَزَّقُوا كُلَّ مُمَزَّقٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.