பாடம் : 103 புனிதப் போருக்குச் செல்ல நாடி வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பதும் வியாழக்கிழமையன்று போருக்குச் செல்ல விரும்புவதும்.
கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்கு (தலைமை தாங்கிச்) செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வது போன்று பாசாங்கு செய்து அதை மறைப்பார்கள்.
‘தபூக் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் செல்லாமல், தான் பின்தங்கிவிட்ட கால கட்டத்தைக் குறித்து என் தந்தை கஅப் இப்னு மாலிக்(ரலி) விவரித்தபோது இதை அவர்கள் கூற கேட்டேன்’ என்று கஅப்(ரலி) முதிய வயதடைந்து கண்பார்வையிழந்துவிட்ட போது அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த- அவர்களின் மகன் அப்துல்லாஹ் இப்னு கஅப்(ரஹ்) அறிவித்தார்.
Book : 56
بَابُ مَنْ أَرَادَ غَزْوَةً فَوَرَّى بِغَيْرِهَا، وَمَنْ أَحَبَّ الخُرُوجَ يَوْمَ الخَمِيسِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ: قَالَ
سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ «حِينَ تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدُ غَزْوَةً إِلَّا وَرَّى بِغَيْرِهَا»
சமீப விமர்சனங்கள்