பாடம் : 107 விடை பெறுவதும், வழியனுப்புவதும்.
அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை ஒரு படையில் அனுப்பி வைத்தார்கள். அப்போது எங்களிடம், ‘நீங்கள் இன்னாரையும் இன்னாரையும் சந்தித்தால் – என்று குறைஷிகளில் இருவரைப் பெயர் குறிப்பிட்டு அவ்விருவரையும் நெருப்பால் எரித்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.
பிறகு, நாங்கள் பயணம் புறப்பட முனைந்தபோது நபி(ஸல்) அவர்களிடம் விடை பெறப் போனோம். அப்போது அவர்கள், ‘நான் இன்னாரையும் இன்னாரையும் நெருப்பால் எரித்து விடும்படி உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், நெருப்பால் வேதனை செய்யும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்பதால், நீங்கள் அவ்விருவரையும் கண்டால் (நெருப்பால் எரிக்க வேண்டாம்;) கொன்று விடுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 56
بَابُ التَّوْدِيعِ
وَقَالَ ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ
بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْثٍ وَقَالَ لَنَا: «إِنْ لَقِيتُمْ فُلاَنًا وَفُلاَنًا – لِرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ سَمَّاهُمَا – فَحَرِّقُوهُمَا بِالنَّارِ» قَالَ: ثُمَّ أَتَيْنَاهُ نُوَدِّعُهُ حِينَ أَرَدْنَا الخُرُوجَ، فَقَالَ: «إِنِّي كُنْتُ أَمَرْتُكُمْ أَنْ تُحَرِّقُوا فُلاَنًا وَفُلاَنًا بِالنَّارِ، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلَّا اللَّهُ، فَإِنْ أَخَذْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا»
சமீப விமர்சனங்கள்