ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்.
நான் (‘இறைமறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறைவழியில் துன்பங்களைச் சுமப்பேன்’ என்று) நபி(ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உறுதிமொழியளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி(ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘அக்வஃ உடைய மகனே! (ஸலமாவே!) நீ உறுதிமொழியளிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். ‘நான் ஏற்கனவே உறுதிமொழியளித்து விட்டேன், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தேன்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மீண்டும் (அளிப்பீராக!)’ என்று கூறினார்கள். எனவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன்.
அறிவிப்பாளர் யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) கூறினார்.
(இதை எனக்கு அறிவித்த ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்களிடம்) நான், ‘அபூ முஸ்லிமே! அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி(ஸல்) அவர்களிடம்) உறுதிமொழியளித்தீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்’ என்று பதிலளித்தார்கள்.
Book :56
حَدَّثَنَا المَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ عَدَلْتُ إِلَى ظِلِّ الشَّجَرَةِ، فَلَمَّا خَفَّ النَّاسُ قَالَ: «يَا ابْنَ الأَكْوَعِ أَلاَ تُبَايِعُ؟» قَالَ: قُلْتُ: قَدْ بَايَعْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَأَيْضًا» فَبَايَعْتُهُ الثَّانِيَةَ، فَقُلْتُ لَهُ: يَا أَبَا مُسْلِمٍ عَلَى أَيِّ شَيْءٍ كُنْتُمْ تُبَايِعُونَ يَوْمَئِذٍ؟ قَالَ: عَلَى المَوْتِ
சமீப விமர்சனங்கள்