பாடம் : 118 பீதி நிறைந்த நேரத்தில் தனியாகப் புறப்படுதல்.
பாடம் : 119 இறைவழியில் (தன் சார்பாகப்) போரிடுவதற்காக ஒருவருக்குக் கூலி கொடுப்பதும் பயண மூட்டைகளைச் சுமக்கும் வாகனங்களைக் கொடுத்தனுப்புவதும்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், நான் புனிதப் போருக்குச் செல்ல விரும்புகிறேன் என்று கூறினேன். அவர்கள், நான் என் செல்வத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுத்து உனக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறினார்கள். நான்,அல்லாஹ் எனக்கு நிறையக் கொடுத்திருக்கின்றான் (அதுவே, எனக்குப் போதும்)என்று கூறினேன்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், உனது செல்வம் உனக்குரியது. நான் இந்த வகையில் என் செல்வத்(தில் ஒரு பாகத்)தைச் செலவிடவேண்டுமென்று விரும்புகிறேன் என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், மக்கள் சிலர் இந்த (பைத்துல் மால்-அரசுக் கருவூலத்தின்) செல்வத்திலிருந்து அறப்போர் புரிவதற்காக (உதவித் தொகையை) எடுத்துக் கொண்டு பிறகு அறப்போர் புரிவதில்லை. இத்தகையவர் பெற்ற பணத்தை, அவருடைய செல்வத்திலிருந்து நாம் எடுத்துக் கொள்ள நமக்கு (முழு) உரிமையுண்டு என்று கூறினார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்களும் முஜாஹித் (ரஹ்) அவர்களும், உன்னிடம் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப்) புறப்பட உதவும் செல்வம் ஏதும் கொடுக்கப்பட்டால் அதை நீ விரும்பியபடி (போருக்குப்) பயன்படுத்திக் கொள். அதை உன் வீட்டாரிடமும் நீ கொடுக்கலாம் என்று (மார்க்கத் தீர்ப்பு) கூறினர்.
உமர்(ரலி) அறிவித்தார்.
நான் ஒருவரை இறைவழியில் அறப்போர் புரிய ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தேன். (அவர் பயணம் செய்ய ஒரு குதிரையை இலவசமாகத் தந்துதவினேன்.)
பிறகு அது (சந்தையில்) விற்கப்படுவதைக் கண்டேன். நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் அதை வாங்கட்டுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்’ என்று கூறினார்கள். என அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.
Book : 56
بَابُ الخُرُوجِ فِي الفَزَعِ وَحْدَهُ
بَابُ الجَعَائِلِ وَالحُمْلاَنِ فِي السَّبِيلِ
وَقَالَ مُجَاهِدٌ: قُلْتُ لِابْنِ عُمَرَ: الغَزْوَ، قَالَ: «إِنِّي أُحِبُّ أَنْ أُعِينَكَ بِطَائِفَةٍ مِنْ مَالِي»، قُلْتُ: أَوْسَعَ اللَّهُ عَلَيَّ، قَالَ: «إِنَّ غِنَاكَ لَكَ، وَإِنِّي أُحِبُّ أَنْ يَكُونَ مِنْ مَالِي فِي هَذَا الوَجْهِ» وَقَالَ عُمَرُ: «إِنَّ نَاسًا يَأْخُذُونَ مِنْ هَذَا المَالِ لِيُجَاهِدُوا، ثُمَّ لاَ يُجَاهِدُونَ، فَمَنْ فَعَلَهُ، فَنَحْنُ أَحَقُّ بِمَالِهِ حَتَّى نَأْخُذَ مِنْهُ مَا أَخَذَ» وَقَالَ طَاوُسٌ، وَمُجَاهِدٌ: «إِذَا دُفِعَ إِلَيْكَ شَيْءٌ تَخْرُجُ بِهِ فِي سَبِيلِ اللَّهِ، فَاصْنَعْ بِهِ مَا شِئْتَ، وَضَعْهُ عِنْدَ أَهْلِكَ»
حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: سَمِعْتُ مَالِكَ بْنَ أَنَسٍ، سَأَلَ زَيْدَ بْنَ أَسْلَمَ، فَقَالَ زَيْدٌ: سَمِعْتُ أَبِي يَقُولُ: قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَرَأَيْتُهُ يُبَاعُ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آشْتَرِيهِ؟ فَقَالَ: «لاَ تَشْتَرِهِ، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ»
சமீப விமர்சனங்கள்