பாடம் : 120 (அறப்போரில் உதவி புரிய அமர்த்தப்பட்ட) கூலியாள்.
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களும் இப்னு சீரீன் (ரஹ்) அவர்களும் (அறப்போரில் உதவும்) கூலியாளுக்குப் போரில் கிடைத்த செல்வத்திலிருந்து பங்கு தரப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
அதிய்யா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் ஒரு குதிரையை அதற்கு (போரில் கிடைக்கும் செல்வத்திலிருந்து) தரப்படும் பங்கில் பாதியைத் தந்து விடுவதாகக் கூறி (வாடகைக்கு) எடுத்தார்கள். அந்தக் குதிரைக்கு நானூறு தீனார் பங்கு கிடைத்தது. இரு நூறு தீனார்களைத் தாம் எடுத்துக் கொண்டு குதிரையின் உரிமையாளருக்கு இருநூறு தீனார்களைக் கொடுத்தார்கள்.
யஃலா இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். நான் இளவயது ஒட்டகம் ஒன்றில் (ஒருவரை அறப்போருக்கு) ஏற்றி அனுப்பினேன். அதை என் நற்செயல்களிலேயே உறுதியானதாக என் மனதில் கருதுகிறேன். அப்போது (அறப்போரில் உதவி புரிய) பணியாள் ஒருவரை அமர்த்தினேன். அந்தப் பணியாள் ஒரு மனிதரோடு போரிட்டார்.
அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் தன்னுடைய கையை, கடித்தவரின் வாயிலிருந்து உருவினார் அப்போது கடித்தவரின் முன்பல்லை அவர் பிடுங்கப்பட்டவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். (பல்லைப் பிடுங்கியவர் மீது வழக்கு தொடுத்தார்.) அதற்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அப்போது, ‘நீ ஒட்டகம் மெல்வது போல் மென்று கொண்டிருக்க, அவர் தன் கையை உனக்குக் கொடுத்துக் கொண்டிருப்பாரா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
Book : 56
بَابُ الأَجِيرِ وَقَالَ الحَسَنُ، وَابْنُ سِيرِينَ: «يُقْسَمُ لِلْأَجِيرِ مِنَ المَغْنَمِ» وَأَخَذَ عَطِيَّةُ بْنُ قَيْسٍ فَرَسًا عَلَى النِّصْفِ، فَبَلَغَ سَهْمُ الفَرَسِ أَرْبَعَ مِائَةِ دِينَارٍ، فَأَخَذَ مِائَتَيْنِ، وَأَعْطَى صَاحِبَهُ مِائَتَيْنِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ تَبُوكَ، فَحَمَلْتُ عَلَى بَكْرٍ، فَهُوَ أَوْثَقُ أَعْمَالِي فِي نَفْسِي، فَاسْتَأْجَرْتُ أَجِيرًا، فَقَاتَلَ رَجُلًا، فَعَضَّ أَحَدُهُمَا الآخَرَ، فَانْتَزَعَ يَدَهُ مِنْ فِيهِ، وَنَزَعَ ثَنِيَّتَهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهْدَرَهَا، فَقَالَ: «أَيَدْفَعُ يَدَهُ إِلَيْكَ، فَتَقْضَمُهَا كَمَا يَقْضَمُ الفَحْلُ»
சமீப விமர்சனங்கள்