பாடம் : 140 ஒருவர் (அறப் போருக்குச் செல்ல) தன் பெயரைப் பதிவு செய்து கொண்ட பின் அவரது மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட்டால் அல்லது (போரில் கலந்து கொள்ள முடியாதபடி அவருக்கு) வேறு ஏதாவது (நியாயமான) காரணம் இருந்தால் அவர் போரில் கலந்து கொள்ளாமலிருக்க அனுமதியளிக்கப்படுமா?
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்’ என்று கூறினார்கள்.
Book : 56
بَابُ مَنِ اكْتُتِبَ فِي جَيْشٍ فَخَرَجَتِ امْرَأَتُهُ حَاجَّةً، أَوْ كَانَ لَهُ عُذْرٌ، هَلْ يُؤْذَنُ لَهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّهُ: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
«لاَ يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ، وَلاَ تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ»، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اكْتُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَخَرَجَتِ امْرَأَتِي حَاجَّةً، قَالَ: «اذْهَبْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ»
சமீப விமர்சனங்கள்