பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் காலாட் படையினருக்குத் தலைவராக நியமித்தார்கள். அவர்கள் (மொத்தம்) ஐம்பது பேர் இருந்தனர். ‘(நாங்கள் போரில் கொல்லப்பட்டு) எங்க(ள் சடலங்க)ளைப் பறவைகள் கொத்திச் செல்வதை நீங்கள் பார்த்தால் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்.
நாங்கள் எதிரிகளைத் தோற்கடித்து (போர்க் களத்தில் செத்து வீழ்ந்து கிடக்கும் அவர்களை) மிதித்துச் செல்வதை நீங்கள் பார்த்தாலும் கூட நான் உங்களுக்குச் சொல்லியனுப்பும் வரை உங்களுடைய இடத்தைவிட்டு நகராதீர்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
முஸ்லிம்கள் இணைவைப்பவர்களைத் தோற்கடித்துவிட்டனர். பெண்கள் தங்கள் ஆடையை உயர்த்தியவர்களாக, அவர்களின் கால் தண்டைகளும் கால்களும் வெளியில் தெரிய ஓடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களின் சகாக்கள், ‘போர்ச் செல்வங்கள்! மக்களே! போர்ச் செல்வங்கள்! உங்கள் தோழர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். இன்னும் எதைத் தான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று (உரக்கக்) கூறலாயினர். (
இதைக் கேட்ட) அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி), ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மக்களிடம் சென்று போர்க்களத்திலுள்ள பொருட்களை எடுத்துக் கொள்வோம்’ என்று கூறினார்கள். அவர்கள் மக்களிடம் சென்றபோது அவர்களின் முகங்கள் திருப்பப்பட்டு (எங்கிருந்து வந்தார்களோ அந்த இடத்திற்கே திருப்பியனுப்பப்பட்டு) தோற்றுப் போய் சென்றுவிட்டனர்.
அவர்களுக்குப் பின்னால் இருந்த அணியிலியிருந்து அவர்களைப் போர்க்களத்திற்குத் திரும்பி வரும்படி இறைத்தூதர் அழைத்துக் கொண்டிருந்தபோது இது நடந்தது. அப்போது, நபி(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் பத்ருப் போரின்போது இணைவைப்பவர்களில் (மொத்தம்) நூற்றி நாற்பது பேரை பாதிப்புக்குள்ளாக்கி விட்டிருந்தார்கள். எழுபது பேரைக் கைதிகளாகப் பிடித்திருந்தார்கள்; எழுபது பேரைக் கொன்று விட்டிருந்தார்கள். எனவே, (அப்போது எதிரிகளின் அணியிலிருந்த) அபூ சுஃப்யான் (களத்தில் இறங்கி), ‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். அவருக்கு பதிலளிக்க வேண்டாமென்று நபி(ஸல்) அவர்கள் மக்களைத் தடுத்துவிட்டார்கள். மீண்டும் ‘(உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூ பக்ர்) இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். பிறகு, ‘கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?’ என்று மூன்று முறை கேட்டார். பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி, ‘இவர்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டனர்’ என்றார்.
(இதைக் கேட்டு) உமர்(ரலி), தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், ‘பொய் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! நீ எண்ணியவர்கள் எல்லாருமே உயிரோடு தான் இருக்கிறார்கள். உனக்கு மனத் துன்பமளிக்கும் ஒரு விஷயம் (மக்கா வெற்றி) தான் இப்போது எஞ்சியுள்ளது?’ என்றார்கள். (உடனே) அபூ சுஃப்யான், ‘இந்நாள், பத்ருப் போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். (நமக்கிடையிலான) போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருகிறது. (உங்கள்) கூட்டத்தாரில் நீங்கள் அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது’ என்று சொல்லிவிட்டு பிறகு, ‘ஹுபலே! உன் கட்சி மேலோங்கிவிட்டது, என்று கவிதை பாடலானார்.
நபி(ஸல்) அவர்கள் (தோழர்களை நோக்கி), ‘இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாம் என்ன(பதில்) சொல்வது?’ என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மேலானவன்’ என்று சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். அபூ சுஃப்யான், ‘எங்களுக்கு ‘உஸ்ஸா’ (எனும் தெய்வம்) இருக்கிறது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே’ என்று கவிதை பாடினார். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘இவருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது? இறைத்தூதர் அவர்களே!’ என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே எங்கள் உதவியாளன்; உங்களுக்கு உதவியாளனே இல்லையே!’ என்று சொல்லுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book :56
حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ البَرَاءَ بْنَ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُحَدِّثُ قَالَ
جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ، وَكَانُوا خَمْسِينَ رَجُلًا عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، فَقَالَ: «إِنْ رَأَيْتُمُونَا تَخْطَفُنَا الطَّيْرُ فَلاَ تَبْرَحُوا مَكَانَكُمْ، هَذَا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ، وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَا القَوْمَ وَأَوْطَأْنَاهُمْ، فَلاَ تَبْرَحُوا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ»، فَهَزَمُوهُمْ، قَالَ: فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ، قَدْ بَدَتْ خَلاَخِلُهُنَّ وَأَسْوُقُهُنَّ، رَافِعَاتٍ ثِيَابَهُنَّ، فَقَالَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرٍ: الغَنِيمَةَ أَيْ قَوْمِ الغَنِيمَةَ، ظَهَرَ أَصْحَابُكُمْ فَمَا تَنْتَظِرُونَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جُبَيْرٍ: أَنَسِيتُمْ مَا قَالَ لَكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالُوا: وَاللَّهِ لَنَأْتِيَنَّ النَّاسَ، فَلَنُصِيبَنَّ مِنَ الغَنِيمَةِ، فَلَمَّا أَتَوْهُمْ صُرِفَتْ وُجُوهُهُمْ، فَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ، فَلَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ اثْنَيْ عَشَرَ رَجُلًا، فَأَصَابُوا مِنَّا سَبْعِينَ، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ أَصَابُوا مِنَ المُشْرِكِينَ يَوْمَ بَدْرٍ أَرْبَعِينَ وَمِائَةً، سَبْعِينَ أَسِيرًا وَسَبْعِينَ قَتِيلًا، فَقَالَ أَبُو سُفْيَانَ: أَفِي القَوْمِ مُحَمَّدٌ ثَلاَثَ مَرَّاتٍ، فَنَهَاهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجِيبُوهُ، ثُمَّ قَالَ: أَفِي القَوْمِ ابْنُ أَبِي قُحَافَةَ؟ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ قَالَ: أَفِي القَوْمِ ابْنُ الخَطَّابِ؟ ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ رَجَعَ إِلَى أَصْحَابِهِ فَقَالَ: أَمَّا هَؤُلاَءِ، فَقَدْ قُتِلُوا، فَمَا مَلَكَ عُمَرُ نَفْسَهُ، فَقَالَ: كَذَبْتَ وَاللَّهِ يَا عَدُوَّ اللَّهِ، إِنَّ الَّذِينَ عَدَدْتَ لَأَحْيَاءٌ كُلُّهُمْ، وَقَدْ بَقِيَ لَكَ مَا يَسُوءُكَ، قَالَ: يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ، وَالحَرْبُ سِجَالٌ، إِنَّكُمْ سَتَجِدُونَ فِي القَوْمِ مُثْلَةً، لَمْ آمُرْ بِهَا وَلَمْ تَسُؤْنِي، ثُمَّ أَخَذَ يَرْتَجِزُ: أُعْلُ هُبَلْ، أُعْلُ هُبَلْ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ تُجِيبُوا لَهُ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ؟ قَالَ: ” قُولُوا: اللَّهُ أَعْلَى وَأَجَلُّ “، قَالَ: إِنَّ لَنَا العُزَّى وَلاَ عُزَّى لَكُمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ تُجِيبُوا لَهُ؟»، قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، مَا نَقُولُ؟ قَالَ: «قُولُوا اللَّهُ مَوْلاَنَا، وَلاَ مَوْلَى لَكُمْ»
Bukhari-Tamil-3039.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3039.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்