தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3048

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 172 இணைவைப்பவர்களிடம் பிணைத் தொகை பெறுவது.

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் சகோதரி மகன் அப்பாஸ் அவர்களின் பிணைத் தொகையை (வாங்காமல்)விட்டுக் கொடுத்து (இலவசமாக அவர்களை விடுதலை செய்து) விட அனுமதி கொடுங்கள்’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘பிணைத் தொகையிலிருந்து ஒரேயொரு திர்ஹத்தைக் கூட (வாங்காமல்)விட்டு விடாதீர்கள்’ என்று (தம் தோழர்களிடம்) சொன்னார்கள்.
Book : 56

(புகாரி: 3048)

بَابُ فِدَاءِ المُشْرِكِينَ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ

أَنَّ رِجَالًا مِنَ الأَنْصَارِ اسْتَأْذَنُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ فَلْنَتْرُكْ لِابْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ، فَقَالَ: «لاَ تَدَعُونَ مِنْهَا دِرْهَمًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.