பாடம் : 7
மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கடமைகள்அனைத்தையும் நிறைவேற்றலாம்.
இப்றாஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் தவறேதுமில்லை என்று கூறியுள்ளார்கள்.
பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருப்பவர் குர்ஆனை ஓதுவதில் எந்தத் தவறுமில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரமும் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். (பார்க்க: முஸ்லிம்-608 )
(பெரு நாள் தினத்தன்று) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களை(யும்) (தொழுகைத் திடலுக்கருகில்) அழைத்துச் சென்று ஆண்களைப் போன்று தக்பீர் சொல்லவும் பிராத்திக்கவும் நாங்கள் பணிக்கப்பட்டோம் என உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமக்கு எழுதியிருந்த கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி மன்னர் ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார்.
அதில் : பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா கலிமத்தின் … அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…. வேதக்காரர்களே எங்களுக்கும் உங்களுக்குமிடையில் பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள் (3:64) என்று தொடங்கும் (குர்ஆன் வசனங்கள்) எழுதப்பட்டிருந்தது. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின் போது) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜுடைய மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்கள்; ஆனால் தொழவில்லை. இதை அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் பெருந்துடக்குடையவனாக (குளியல் கடமையான) நிலையிலும் (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி ஆடுமாடுகளை) அறுப்பேன். (ஏனெனில்) வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் புசிக்க வேண்டாம் (6:121) என்று கூறியுள்ளான்.
‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஏனழுகிறாய்?’ என்று கேட்டார்கள். ‘இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்’ என்றேன். ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அப்போது ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபத்துல்லாஹ்வை வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்’ என்று கூறினார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்
Book : 6
بَابٌ: تَقْضِي الحَائِضُ المَنَاسِكَ كُلَّهَا إِلَّا الطَّوَافَ بِالْبَيْتِ
وَقَالَ إِبْرَاهِيمُ: «لاَ بَأْسَ أَنْ تَقْرَأَ الآيَةَ»، وَلَمْ يَرَ ابْنُ عَبَّاسٍ «بِالقِرَاءَةِ لِلْجُنُبِ بَأْسًا» وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ ” وَقَالَتْ أُمُّ عَطِيَّةَ: «كُنَّا نُؤْمَرُ أَنْ يَخْرُجَ الحُيَّضُ فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ وَيَدْعُونَ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ، أَخْبَرَنِي أَبُو سُفْيَانَ، أَنَّ هِرَقْلَ دَعَا بِكِتَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَرَأَ فَإِذَا فِيهِ: ” بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَ {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ} [آل عمران: 64] ” الآيَةَ وَقَالَ عَطَاءٌ: عَنْ جَابِرٍ، حَاضَتْ عَائِشَةُ فَنَسَكَتْ المَنَاسِكَ غَيْرَ الطَّوَافِ بِالْبَيْتِ وَلاَ تُصَلِّي وَقَالَ الحَكَمُ: ” إِنِّي لَأَذْبَحُ وَأَنَا جُنُبٌ، وَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَلاَ تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ} [الأنعام: 121]
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ
خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ نَذْكُرُ إِلَّا الحَجَّ، فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ، فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ؟» قُلْتُ: لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ العَامَ، قَالَ: «لَعَلَّكِ نُفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَافْعَلِي مَا يَفْعَلُ الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي»
சமீப விமர்சனங்கள்