தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3054

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 177 தூதுக் குழுவினரை வரவேற்பதற்காக (ஆடையணிகளால்) அலங்கரித்துக் கொள்வது.

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப்படுவதைக் கண்டார்கள், அதை (வாங்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த அங்கியை வாங்கி, பெருநாளின் போதும் தூதுக் குழுக்கள் வருகை தரும் போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்.’.. அல்லது ‘(மறுமையில்) எந்தப் பங்கும் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்.’. சொன்னார்கள்.

பிறகு, உமர்(ரலி) அல்லாஹ் நாடிய வரை (சிறிது நேரம்) தங்கியிருந்தார்கள். பின்பு, நபி(ஸல்) அவர்கள் பூவேலைப்பாடு செய்யப்பட்ட பட்டு அங்கி ஒன்றை உமர்(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி) அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! ‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவருடைய ஆடையாகும்’ அல்லது… அல்லது.. (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’… கூறினீர்கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இதை நீங்கள் விற்று விடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதனையாவது இதைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்வீர்கள் (என்பதற்காக இதை நான் உங்களுக்கு அனுப்பி வைத்தேன்)’ என்று கூறினார்கள்.
Book : 56

(புகாரி: 3054)

بَابُ التَّجَمُّلِ لِلْوُفُودِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

وَجَدَ عُمَرُ حُلَّةَ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ ابْتَعْ هَذِهِ الحُلَّةَ، فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَلِلْوُفُودِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ، أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَلَبِثَ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ فَأَقْبَلَ بِهَا عُمَرُ حَتَّى أَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ، ثُمَّ أَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ، فَقَالَ: «تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا بَعْضَ حَاجَتِكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.