பாடம் : 179 நபி (ஸல்) அவர்கள் யூதரிடம், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர்கள் என்று கூறியது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 180 எதிரி நாட்டிலிருக்கும் சிலர், அங்கு தமக்குச் செல்வமும் நிலங்களும் இருக்கும் நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டை இஸ்லாமிய அரசு கைப்பற்றிக் கொள்ளும் பட்சத்தில் அது அந்தச் சிலருக்கே உரியதாகும்.
உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.
நான் நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜின்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அபூ தாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா?’ என்று கேட்டு விட்டுப் பிறகு, ‘குறைஷிகள் இறைநிராகரிப்பில் நிலைத்திருக்கப் போவதாக சத்தியம் செய்த இடமான ‘முஹஸ்ஸப்’ என்கிற ‘பனூ கினானா’ பள்ளத்தாக்கில் நாளை நாம் தங்கவிருக்கிறோம்’ என்று கூறினார்கள்.
பனூ கினானா குலத்தார் குறைஷிகளிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, ‘அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள மாட்டோம்; அவர்களுக்குப் புகலிடம் அளிக்கவும் மாட்டோம்’ என்று ஒப்பந்தம் செய்திருந்தையே நபி(ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.
Book : 56
بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْيَهُودِ: «أَسْلِمُوا تَسْلَمُوا»
قَالَهُ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ
بَابُ إِذَا أَسْلَمَ قَوْمٌ فِي دَارِ الحَرْبِ، وَلَهُمْ مَالٌ وَأَرَضُونَ، فَهِيَ لَهُمْ
حَدَّثَنَا مَحْمُودٌ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ بْنِ عَفَّانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ غَدًا فِي حَجَّتِهِ؟ قَالَ: «وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مَنْزِلًا؟»، ثُمَّ قَالَ: «نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ المُحَصَّبِ، حَيْثُ قَاسَمَتْ قُرَيْشٌ عَلَى الكُفْرِ»، وَذَلِكَ أَنَّ بَنِي كِنَانَةَ حَالَفَتْ قُرَيْشًا عَلَى بَنِي هَاشِمٍ، أَنْ لاَ يُبَايِعُوهُمْ، وَلاَ يُؤْوُوهُمْ، قَالَ الزُّهْرِيُّ: وَالخَيْفُ: الوَادِي
சமீப விமர்சனங்கள்