பாடம் : 188 பாரசீக மொழியிலும் (அரபியல்லாத பிற அஜமி) மொழியிலும் பேசுவது.
அல்லாஹ் கூறுகிறான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளனவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (30:22)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்: தூதர்கள் அனைவரையும் அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம். (14:4)185
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(அகழ்ப் போரின் போது) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கள் ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ஸாவு வாற்கோதுமையை அரைத்து மாவாக்கியுள்ளேன்; எனவே, தாங்களும் இன்னொருவரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் விருந்துச் சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள்’ என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.
Book : 56
بَابُ مَنْ تَكَلَّمَ بِالفَارِسِيَّةِ وَالرَّطَانَةِ
وَقَوْلِهِ تَعَالَى: {وَاخْتِلاَفُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ} [الروم: 22]، {وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ} [إبراهيم: 4]
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، أَخْبَرَنَا سَعِيدُ بْنُ مِينَاءَ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ذَبَحْنَا بُهَيْمَةً لَنَا، وَطَحَنْتُ صَاعًا مِنْ شَعِيرٍ، فَتَعَالَ أَنْتَ وَنَفَرٌ، فَصَاحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا أَهْلَ الخَنْدَقِ إِنَّ جَابِرًا قَدْ صَنَعَ سُؤْرًا، فَحَيَّ هَلًا بِكُمْ»
சமீப விமர்சனங்கள்