தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3075

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 191 போரில் கிடைத்த ஒட்டகங்களையும் ஆடுகளையும் (பங்கிடுவதற்கு முன்னால்) அறுப்பது வெறுக்கத் தக்கது.

 ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. எங்களுக்கு ஒட்டகம் ஒன்றும் ஆடு ஒன்றும் கிடைத்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். எனவே, மக்கள் அவசரப்பட்டுப் பாத்திரங்களை அடுப்புகளில் வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன.

பிறகு (அவற்றை) நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டார்கள். அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் ஓடிவிட்டது மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. அந்த ஒட்டகத்தை அவர்கள் விரட்டிப் பிடிக்க முயன்றார்கள். அது அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது.

ஒருவர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அந்த ஒட்டகத்தை (ஓட முடியாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘காட்டு மிருகங்களில் கட்டுக் கடங்காதவை இருப்பது போல் இந்த விலங்குகளும் கட்டுக்கடங்காதவையாகும். உங்களிடமிருந்து விரண்டோடி விடுபவற்றை இவ்வாறே செய்யுங்கள். (அம்பெய்து தடுத்து நிறுத்துங்கள்)’ என்று கூறினார்கள்.

நான், ‘எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே, நாங்கள் (அவற்றை வாட்களால் அறுக்காமல்) மூங்கில்களால் அறுக்கலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரத்தத்தை ஓடச் செய்கிற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும் போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்;

பல்லையும் நகத்தையும் தவிர! இதைப் பற்றி (இந்த இரண்டினாலும் அறுக்கப்பட்டதை ஏன் உண்ணக் கூடாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குச் சொல்கிறேன்; பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
Book : 56

(புகாரி: 3075)

بَابُ مَا يُكْرَهُ مِنْ ذَبْحِ الإِبِلِ وَالغَنَمِ فِي المَغَانِمِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ جَدِّهِ رَافِعٍ، قَالَ

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الحُلَيْفَةِ، فَأَصَابَ النَّاسَ جُوعٌ، وَأَصَبْنَا إِبِلًا وَغَنَمًا، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُخْرَيَاتِ النَّاسِ، فَعَجِلُوا فَنَصَبُوا القُدُورَ، فَأَمَرَ بِالقُدُورِ، فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ، فَعَدَلَ عَشَرَةً مِنَ الغَنَمِ بِبَعِيرٍ، فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، وَفِي القَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ، فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ، فَأَهْوَى إِلَيْهِ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ، فَقَالَ: «هَذِهِ البَهَائِمُ لَهَا أَوَابِدُ كَأَوَابِدِ الوَحْشِ، فَمَا نَدَّ عَلَيْكُمْ، فَاصْنَعُوا بِهِ هَكَذَا». فَقَالَ جَدِّي: إِنَّا نَرْجُو، أَوْ نَخَافُ أَنْ نَلْقَى العَدُوَّ غَدًا، وَلَيْسَ مَعَنَا مُدًى، أَفَنَذْبَحُ بِالقَصَبِ؟ فَقَالَ: ” مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ: أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الحَبَشَةِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.