தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3081

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 195 இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற சமுதாயப் பெண்கள் (அரச துரோகக் குற்றமிழைக்கும் போது) அல்லது முஸ்லிமான பெண்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அவர்களின் முடியை, மற்றும் அவர்களின் ஆடையை அவிழ்த்துச் சோதிக்க வேண்டிய (பணி) நிர்பந்தம் (அரசு அதிகாரியான) ஒருவருக்கு ஏற்பட்டால், அவ்வாறு செய்ய அனுமதியுண்டு.

 ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார்.

உஸ்மான்(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான அபூ அப்திர் ரஹ்மான்(ரஹ்), அலீ(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான இப்னு அதிய்யா(ரஹ்) அவர்களிடம் இப்படிக் கூறினார்கள்.
உங்கள் தோழர் (அலீ) அவர்களுக்கு ரத்தம் சிந்துவதற்கான துணிவைக் கொடுத்தது எது என்று அறிவேன்.

(ஏனெனில்) அவர் (பின்வருமாறு) சொல்ல கேட்டிருக்கிறேன்:

என்னையும் ஸுபைர்(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி, ‘நீங்கள் இன்ன ‘ரவ்ளா’ என்னும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாதிப் ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்’ என்று கூறினார்கள். நாங்கள் ரவ்ளாவுக்குச் சென்று, ‘கடிதம் (எங்கே)?’ என்று (அப்பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண், ‘அவர் என்னிடம் கொடுக்கவில்லை’ என்று கூறினாள். நாங்கள், ‘நீயாக அதை வெளியே எடுக்கிறாயா அல்லது நான் உன்னை நிர்வாணப்படுத்தட்டுமா?’ என்று கேட்டோம். உடனே, அவள் தன் நீண்ட கூந்தல் தொட்டுக் கொண்டிருக்கும் இடுப்பிலிருந்து அதை வெளியே எடுத்தாள்.

மடியிலிருந்து (கடிதம் கிடைத்த) உடனே நபி(ஸல்) அவர்கள், ஹாதிப் அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். ஹாதிப் அவர்கள் (வந்து), ‘(இறைத்தூதர் அவர்களே!) அவசரப்படாதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நிராகரிக்கவுமில்லை; இஸ்லாத்தின் மீது எனக்கு நேசத்தைத் தவிர வேறெதுவும் அதிகரிக்கவுமில்லை.

தங்கள் தோழர்கள் அனைவருக்குமே மக்காவில் அவர்களின் மனைவி மக்களையும் அவர்களின் செல்வத்தையும் எவரின் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகையோர் இருக்கின்றனர். ஆனால், எனக்கோ எவருமே இல்லை. எனவே, அவர்களிடம் நான் எனக்கு ஓர் ஆதரவை உருவாக்கிக் கொள்ள விரும்பினேன்’ என்று கூறினார்கள்.

அவர்களின் இந்த வாக்குமூலத்தை நபி(ஸல்) அவர்கள் உண்மையானதென்று ஏற்றார்கள். ஆனால், உமர் அவர்கள், ‘என்னை அவரின் கழுத்கை; கொய்தெறிய அனுமதியுங்கள். ஏனென்றால், அவர் நயவஞ்சகராகிவிட்டார்’ என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உங்களுக்கென்ன தெரியும்? அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் தூய எண்ணத்தை அறிந்து (அவர்களை நோக்கி), ‘நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்’ என்று கூறி விட்டிருக்கலாம்’ என்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லைக் கேட்டிருந்தது தான் அலீ(ரலி) அவர்களுக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கிறது.

(இவ்வாறு அபூ அப்திர் ரஹ்மான் கூறினார்.)
Book : 56

(புகாரி: 3081)

بَابُ إِذَا اضْطَرَّ الرَّجُلُ إِلَى النَّظَرِ فِي شُعُورِ أَهْلِ الذِّمَّةِ، وَالمُؤْمِنَاتِ إِذَا عَصَيْنَ اللَّهَ، وَتَجْرِيدِهِنَّ

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ حَوْشَبٍ الطَّائِفِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، – وَكَانَ عُثْمَانِيًّا فَقَالَ لِابْنِ عَطِيَّةَ: وَكَانَ عَلَوِيًّا

إِنِّي لَأَعْلَمُ مَا الَّذِي جَرَّأَ صَاحِبَكَ عَلَى الدِّمَاءِ، سَمِعْتُهُ يَقُولُ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالزُّبَيْرَ، فَقَالَ: «ائْتُوا رَوْضَةَ كَذَا، وَتَجِدُونَ بِهَا امْرَأَةً، أَعْطَاهَا حَاطِبٌ كِتَابًا»، فَأَتَيْنَا الرَّوْضَةَ: فَقُلْنَا: الكِتَابَ، قَالَتْ: لَمْ يُعْطِنِي، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ أَوْ لَأُجَرِّدَنَّكِ، فَأَخْرَجَتْ مِنْ حُجْزَتِهَا، فَأَرْسَلَ إِلَى حَاطِبٍ، فَقَالَ: لاَ تَعْجَلْ، وَاللَّهِ مَا كَفَرْتُ وَلاَ ازْدَدْتُ لِلْإِسْلاَمِ إِلَّا حُبًّا، وَلَمْ يَكُنْ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلَّا وَلَهُ بِمَكَّةَ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، وَلَمْ يَكُنْ لِي أَحَدٌ، فَأَحْبَبْتُ أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا، فَصَدَّقَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عُمَرُ: دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ فَإِنَّهُ قَدْ نَافَقَ، فَقَالَ: ” مَا يُدْرِيكَ، لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ “، فَهَذَا الَّذِي جَرَّأَهُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.