அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நானும் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி(ஸல்) அவர்களுடன் ஸஃபிய்யா(ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தபோது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே விழுந்தார்கள்.
அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்:
மேலும், அனஸ்(ரலி) இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்:
அபூ தல்ஹா அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து குதித்து இறங்கி, அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி’ என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா(ரலி) இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்களின் மீது அத்துணியை போட்டார்கள். உடனே, அப்பெண்மணி (ஸஃபிய்யா(ரலி)) எழுந்தார்கள்.
பிறகு அபூ தல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களின் வாகனத்தைச் சரிசெய்து தந்தவுடன் இருவரும் ஏறினர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்.
மதீனாவின் அருகே வந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வணங்கியவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கிறோம்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும் வரை இவ்வாறு கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
Book :56
حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ المُفَضَّلِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُو طَلْحَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفِيَّةُ مُرْدِفَهَا عَلَى رَاحِلَتِهِ، فَلَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ عَثَرَتِ النَّاقَةُ، فَصُرِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمَرْأَةُ، وَإِنَّ أَبَا طَلْحَةَ – قَالَ: أَحْسِبُ قَالَ: – اقْتَحَمَ عَنْ بَعِيرِهِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ هَلْ أَصَابَكَ مِنْ شَيْءٍ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ عَلَيْكَ بِالْمَرْأَةِ»،
فَأَلْقَى أَبُو طَلْحَةَ ثَوْبَهُ عَلَى وَجْهِهِ، فَقَصَدَ قَصْدَهَا، فَأَلْقَى ثَوْبَهُ عَلَيْهَا، فَقَامَتِ المَرْأَةُ، فَشَدَّ لَهُمَا عَلَى رَاحِلَتِهِمَا فَرَكِبَا، فَسَارُوا حَتَّى إِذَا كَانُوا بِظَهْرِ المَدِينَةِ – أَوْ قَالَ أَشْرَفُوا عَلَى المَدِينَةِ –
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ»، فَلَمْ يَزَلْ يَقُولُهَا حَتَّى دَخَلَ المَدِينَةَ
சமீப விமர்சனங்கள்