தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3099

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் பற்றி வந்துள்ள செய்திகளும், அவர்களின் பெயரால் அழைக்கப்பட்ட இல்லங்களும்.

அல்லாஹ் கூறுகிறான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அஞ்ஞான காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33)

இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலே தவிர, நுழை யாதீர்கள். (அங்கு) உணவு தயாராகும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டும் இருக்காதீர்கள். ஆனால், நீங்கள் உணவு உண்பதற்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்; நீங்கள் சாப்பிட்டு முடிந்ததும் பிரிந்து சென்று விடுங்கள். பேச்சில் லயித்து விடாதீர்கள். நீங்கள் இவ்வாறு செய்வது நபிக்கு மனவேதனையளிக்கின்றது. ஆயினும், வெட்கத்தின் காரணத்தினால் உங்களிடம் அவர் எதுவும் சொல்வதில்லை.

ஆனால், அல்லாஹ் சத்தியத்தை எடுத்துச் சொல்ல வெட்கப்படுவதில்லை. நீங்கள் (நபியின் மனைவியரான) அவர்களிடம் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். அதுவே உங்களுடைய உள்ளங்களுக்கும், அவர்களுடைய உள்ளங்களுக்கும் தூய்மையளிப்பதாகும். அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. அவருக்குப் பின்னால் அவருடைய மனைவியரை நீங்கள் மணமுடிப்பதும் ஒரு போதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் பெரும் பாவமாகும். (33:53)

 நபி(ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா(ரலி) கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் நோயின் கடுமை அதிகரித்துவிட்டபோது என் வீட்டில் தங்கி சிகிச்சையையும் பராமரிப்பையும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.
Book : 57

(புகாரி: 3099)

بَابُ مَا جَاءَ فِي بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا نُسِبَ مِنَ البُيُوتِ إِلَيْهِنَّ

وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ} [الأحزاب: 33]

وَ {لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَنْ يُؤْذَنَ لَكُمْ} [الأحزاب: 53]

حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، وَمُحَمَّدٌ، قَالاَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا – زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَتْ

«لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.