பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, குவளை, மோதிரம் ஆகியனவும், இவற்றில் நபியவர்களுக்குப் பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன் படுத்திய பங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர்கள் இறந்த பின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் பரக்கத் (அருள்வளம்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, செருப்பு, பாத்திரம் ஆகியனவும்.
அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) கலீஃபாவாக ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி(ஸல்) அவர்களின் மோதிரத்தால் முத்திரையிட்டார்கள். அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. ‘முஹம்மது’ (என்னும் சொல்) ஒரு வரியிலும் ‘ரசூலு’ (‘தூதர்’ என்னும் சொல்) ஒரு வரியிலும் ‘அல்லாஹி’ (‘அல்லாஹ்வின் எனும் சொல்) ஒரு வரியிலும் (‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ – ‘இறைத்தூதர் முஹம்மது’ என்று) பொறிக்கப்பட்டிருந்தது.
Book : 57
بَابُ مَا ذُكِرَ مِنْ دِرْعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَصَاهُ، وَسَيْفِهِ وَقَدَحِهِ، وَخَاتَمِهِ، وَمَا اسْتَعْمَلَ الخُلَفَاءُ بَعْدَهُ مِنْ ذَلِكَ مِمَّا لَمْ يُذْكَرْ قِسْمَتُهُ، وَمِنْ شَعَرِهِ، وَنَعْلِهِ، وَآنِيَتِهِ مِمَّا يَتَبَرَّكُ أَصْحَابُهُ وَغَيْرُهُمْ بَعْدَ وَفَاتِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ
«أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ لَمَّا اسْتُخْلِفَ بَعَثَهُ إِلَى البَحْرَيْنِ وَكَتَبَ لَهُ هَذَا الكِتَابَ وَخَتَمَهُ بِخَاتَمِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ نَقْشُ الخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ»
சமீப விமர்சனங்கள்