தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3111

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அறிவித்தார்.

அலீ(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களைக் குறை பேசுபவர்களாக இருந்திருப்பின் மக்கள் சிலர் அவர்களிடம் வந்து, உஸ்மான்(ரலி) அவர்களின் (அரசின்) ஸகாத் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து முறையிட்ட போதே குறை பேசியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அலீ(ரலி) என்னிடம் ‘நீ உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்று, ‘இந்த ஏடு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நிர்ணயித்த ஸதகா (ஸகாத்தின் சட்டங்கள்) ஆகும். இந்த ஏட்டிலுள்ள படி ஸகாத் வசூலிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று தெரிவி’ என்று கூறினார்கள்.

நான் அதை எடுத்துக் கொண்டு உஸ்மான்(ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அது நமக்குத் தேவையில்லை. (அது ஏற்கனவே நம்மிடம் உள்ளது)’ என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் அதை அலீ(ரலி) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விவரம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘அதை எடுத்த இடத்திலேயே வைத்து விடு’ என்று கூறினார்கள்.
Book :57

(புகாரி: 3111)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ مُنْذِرٍ، عَنِ ابْنِ الحَنَفِيَّةِ، قَالَ

لَوْ كَانَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ، ذَاكِرًا عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، ذَكَرَهُ يَوْمَ جَاءَهُ نَاسٌ فَشَكَوْا سُعَاةَ عُثْمَانَ، فَقَالَ لِي عَلِيٌّ: ” اذْهَبْ إِلَى عُثْمَانَ فَأَخْبِرْهُ: أَنَّهَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَمُرْ سُعَاتَكَ يَعْمَلُونَ فِيهَا، فَأَتَيْتُهُ بِهَا، فَقَالَ: أَغْنِهَا عَنَّا، فَأَتَيْتُ بِهَا عَلِيًّا، فَأَخْبَرْتُهُ فَقَالَ: «ضَعْهَا حَيْثُ أَخَذْتَهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.