தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3127

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 (பிற நாடுகளிலிருந்து) தமக்கு வருகின்ற அன்பளிப்புகளை (தம் தோழர் களிடையே) தலைவர் பங்கிட்டு விடுவதும், பங்கிடும் போது வருகை தராதவர் அல்லது வெளியே சென்றிருப்பவருக்காக (அவரது பங்கைத் தலைவர்) தனியே எடுத்து வைப்பதும்.

 இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்குத் தங்கப் பித்தான்கள் கொண்ட பட்டு அங்கிகள் சில அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதை அவர்கள் தம் தோழர்கள் சிலரிடையே பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து (ஒன்றை) மக்ரமா இப்னு நவ்ஃபல்(ரலி) அவர்களுக்காகத் தனியே எடுத்து வைத்தார்கள்.

மக்ரமா(ரலி), தம் மகன் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அவர்களுடன் வந்து வாசலருகே நின்று, ‘நபி(ஸல்) அவர்களை எனக்காகக் கூப்பிடு’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், மக்ரமா(ரலி) அவர்களின் குரலைக் கேட்டு, அங்கியை எடுத்துச் சென்று அவர்களைச் சந்தித்து, தங்கப் பித்தான்களுடன் அவர்களை வரவேற்று, ‘மிஸ்வரின் தந்தையே! உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன். மிஸ்வரின் தந்தையே! உங்களுக்காக நான் இதை எடுத்து வைத்தேன்’ என்றார்கள். (ஏனெனில்,) மக்ரமா(ரலி) அவர்களின் சுபாவத்தில் சிறிது (கடுமை) இருந்தது.
Book : 57

(புகாரி: 3127)

بَابُ قِسْمَةِ الإِمَامِ مَا يَقْدَمُ عَلَيْهِ، وَيَخْبَأُ لِمَنْ لَمْ يَحْضُرْهُ أَوْ غَابَ عَنْهُ

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُهْدِيَتْ لَهُ أَقْبِيَةٌ مِنْ دِيبَاجٍ، مُزَرَّرَةٌ بِالذَّهَبِ، فَقَسَمَهَا فِي نَاسٍ مِنْ أَصْحَابِهِ، وَعَزَلَ مِنْهَا وَاحِدًا لِمَخْرَمَةَ بْنِ نَوْفَلٍ، فَجَاءَ وَمَعَهُ ابْنُهُ المِسْوَرُ بْنُ مَخْرَمَةَ، فَقَامَ عَلَى البَابِ، فَقَالَ: ادْعُهُ لِي، فَسَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَوْتَهُ، فَأَخَذَ قَبَاءً، فَتَلَقَّاهُ بِهِ، وَاسْتَقْبَلَهُ بِأَزْرَارِهِ، فَقَالَ: «يَا أَبَا المِسْوَرِ خَبَأْتُ هَذَا لَكَ، يَا أَبَا المِسْوَرِ خَبَأْتُ هَذَا لَكَ»، وَكَانَ فِي خُلُقِهِ شِدَّةٌ، وَرَوَاهُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَدِمَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبِيَةٌ، تَابَعَهُ اللَّيْثُ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.