பாடம் : 14 (போரில் கலந்து கொள்ளாமல் வேறொரு பணியை முடித்து வரும்படி) ஒரு தேவைக்காக ஒரு தூதுவரைத் தலைவர் அனுப்பி வைத்திருந்தால் அல்லது (போருக்குச் செல்லாமல்) ஊரில் தங்கியிருக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டால் அவர்களுக்கெல்லாம் (போரில் கிடைத்த பொருட்களில்) பங்கு தரப்படுமா?
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உஸ்மான்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் போனதற்குக் காரணம், அவரின் மனைவியாக அல்லாஹ்வின் தூதருடைய மகள் (ருகைய்யா(ரலி)) இருந்தார்கள். மேலும், அவர்கள் நோய் வாய்ப்படடிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம், ‘பத்ருப் போரில் பங்கெடுத்தவருக்குரிய நற்பலனும் (போர்ச் செல்வத்தில்) அவருக்குரிய பங்கும் உங்களுக்கு உண்டு’ என்று கூறினார்கள்.
Book : 57
بَابُ إِذَا بَعَثَ الإِمَامُ رَسُولًا فِي حَاجَةٍ، أَوْ أَمَرَهُ بِالْمُقَامِ هَلْ يُسْهَمُ لَهُ
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ مَوْهَبٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
إِنَّمَا تَغَيَّبَ عُثْمَانُ عَنْ بَدْرٍ، فَإِنَّهُ كَانَتْ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ مَرِيضَةً، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ»
சமீப விமர்சனங்கள்