தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-314

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 ஒரு பெண் மாதவிடாயிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் போது தமது உடலைத் தேய்த்துக் கழுவுவதும்,அவள் எப்படிக் குளிக்க வேண்டும் என்பதும், இரத்தம்போன இடத்தில் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்செடுத்து இரத்தம் படிந்த இடத்தை எப்படித் துடைக்க வேண்டும் எனும் முறையும்.

  ‘ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மாதவிடாய் நின்ற பின்பு எப்படிக் குளிக்க வேண்டும்?’ என கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்குக் கூறிவிட்டு, ‘கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் நீ சுத்தம் செய்’ என்றார்கள்.

அப்போது ‘நான் எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்?’ என அப்பெண் கேட்டார். ‘அதைக் கொண்டு நீ சுத்தம் செய்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் ‘எப்படி?’ என்று கேட்டபோது ‘ஸுப்ஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்!’ என்று கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து ‘கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய்’ என்று அவளிடம் கூறினேன்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6

(புகாரி: 314)

بَابُ دَلْكِ المَرْأَةِ نَفْسَهَا إِذَا تَطَهَّرَتْ مِنَ المَحِيضِ، وَكَيْفَ تَغْتَسِلُ، وَتَأْخُذُ فِرْصَةً مُمَسَّكَةً، فَتَتَّبِعُ أَثَرَ الدَّمِ

حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ

أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ غُسْلِهَا مِنَ المَحِيضِ، فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ، قَالَ: «خُذِي فِرْصَةً مِنْ مَسْكٍ، فَتَطَهَّرِي بِهَا» قَالَتْ: كَيْفَ أَتَطَهَّرُ؟ قَالَ: «تَطَهَّرِي بِهَا»، قَالَتْ: كَيْفَ؟، قَالَ: «سُبْحَانَ اللَّهِ، تَطَهَّرِي» فَاجْتَبَذْتُهَا إِلَيَّ، فَقُلْتُ: تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.