தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3172

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றே. அவர்களில் சாமானியரும் அடைக்கலம் தரலாம்.

 யஸீத் இப்னு ஷரீக் அத்தைமீ(ரஹ்) அறிவித்தார்.

அலீ(ரலி) எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, நாங்கள் ஓதுகிற புத்தகம் வேறெதுவும் எங்களிடம் இல்லை. இந்த ஏட்டில் காயங்களுக்கான பழி வாங்கல்கள், (ஸகாத்தாகவும் உயிரீட்டுத் தொகையாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விபரங்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன.

‘மேலும், (அதில் கூறப்பட்டுள்ளதாவது:) மதீனா நகரம் ‘அய்ர்’ மலைக்கும் (உஹுது மலை அமைந்துள்ள) இன்ன இடத்திற்கும் இடையிலுள்ள பகுதி வரை புனிதமானதாகும். அதில் எவன் (மார்க்கத்தில் இல்லாத) புதிய ஒன்றை உருவாக்குகிறானோ அல்லது (அவ்விதம்) புதிதாக ஒன்றை உருவாக்குபவனுக்குப் புகலிடம் கொடுக்கிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும்.

அவனிடமிருந்து கடமையான வணக்கம் உபரியான வணக்கம் எதுவுமே ஏற்றுக் கொள்ளப்படாது.

‘விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான) காப்பாளர்களின் அனுமதியின்றி, பிறரைத் தன் காப்பாளர்களாக ஆக்கினால் அவன் மீதும் அவ்வாறே (அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும்) ஏற்படும்.

முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கிறானோ அவன் மீதும் அவ்வாறே (அல்லாஹ்வின், வானவர்களின் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும்) ஏற்படும்.
Book : 58

(புகாரி: 3172)

بَابٌ: ذِمَّةُ المُسْلِمِينَ وَجِوَارُهُمْ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ

حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ

خَطَبَنَا عَلِيٌّ فَقَالَ: مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ إِلَّا كِتَابَ اللَّهِ تَعَالَى، وَمَا فِي هَذِهِ الصَّحِيفَةِ، فَقَالَ: فِيهَا الجِرَاحَاتُ وَأَسْنَانُ الإِبِلِ: «وَالمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى كَذَا، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا أَوْ آوَى فِيهَا مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ، وَمَنْ تَوَلَّى غَيْرَ مَوَالِيهِ فَعَلَيْهِ مِثْلُ ذَلِكَ، وَذِمَّةُ المُسْلِمِينَ وَاحِدَةٌ، فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ مِثْلُ ذَلِكَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.