தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3268

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 11

இப்லீஸும், அவனது சேனைகளும்.

பார்க்க இறை வசனங்கள்: 1)2:34 2)18:50 3) 34:53 4) 37:9 5)4:117 6)7:18 7)17;62 8)17:64 9)37:51.

 ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; ‘என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார்.

ஒருவர் மற்றொருவரிடம் (மீக்காயில் ஜிப்ரீலிடம்), ‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?’ என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘இவருக்கு சூனியம் வைத்தது யார்?’ என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)’ என்று பதிலளித்தார். ‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?’ என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, ‘சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்’ என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘அது எங்கே இருக்கிறது’ என்று கேட்க, ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்’ என்று பதிலளித்தார்கள்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்த போது என்னிடம், ‘அந்தக் கிணற்றிலிருக்கும், பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன’ என்று கூறினார்கள்.

நான், ‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்’ என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.
Book :59

(புகாரி: 3268)

بَابُ صِفَةِ إِبْلِيسَ وَجُنُودِهِ
وَقَالَ مُجَاهِدٌ: {يُقْذَفُونَ} [سبأ: 53] يُرْمَوْنَ، {دُحُورًا} [الصافات: 9] مَطْرُودِينَ {وَاصِبٌ} [الصافات: 9] دَائِمٌ ” وَقَالَ ابْنُ عَبَّاسٍ: مَدْحُورًا مَطْرُودًا يُقَالُ {مَرِيدًا} [النساء: 117] مُتَمَرِّدًا، بَتَّكَهُ قَطَّعَهُ {وَاسْتَفْزِزْ} [الإسراء: 64] اسْتَخِفَّ {بِخَيْلِكَ} [الإسراء: 64] الفُرْسَانُ، وَالرَّجْلُ الرَّجَّالَةُ، وَاحِدُهَا رَاجِلٌ، مِثْلُ صَاحِبٍ وَصَحْبٍ وَتَاجِرٍ وَتَجْرٍ. {لَأَحْتَنِكَنَّ} [الإسراء: 62] لَأَسْتَأْصِلَنَّ [ص:122]. {قَرِينٌ} [الصافات: 51] شَيْطَانٌ

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ:

سُحِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى كَانَ يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّيْءَ وَمَا يَفْعَلُهُ، حَتَّى كَانَ ذَاتَ يَوْمٍ دَعَا وَدَعَا، ثُمَّ قَالَ: ” أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا فِيهِ شِفَائِي، أَتَانِي رَجُلاَنِ: فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَيَّ، فَقَالَ أَحَدُهُمَا لِلْآخَرِ مَا وَجَعُ الرَّجُلِ؟ قَالَ: مَطْبُوبٌ، قَالَ: وَمَنْ طَبَّهُ؟ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ، قَالَ: فِيمَا ذَا، قَالَ: فِي مُشُطٍ وَمُشَاقَةٍ وَجُفِّ طَلْعَةٍ ذَكَرٍ، قَالَ فَأَيْنَ هُوَ؟ قَالَ: فِي بِئْرِ ذَرْوَانَ ” فَخَرَجَ إِلَيْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَجَعَ فَقَالَ لِعَائِشَةَ حِينَ رَجَعَ: «نَخْلُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ» فَقُلْتُ اسْتَخْرَجْتَهُ؟ فَقَالَ: «لاَ، أَمَّا أَنَا فَقَدْ شَفَانِي اللَّهُ، وَخَشِيتُ أَنْ يُثِيرَ ذَلِكَ عَلَى النَّاسِ شَرًّا» ثُمَّ دُفِنَتِ البِئْرُ


Bukhari-Tamil-3268.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3268.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




  1. இதன் அறிவிப்பாளர் தொடரில் எந்த குறையும் இல்லை.
  2. ஆனால் இந்த ஹதீஸ் சூனியத்தை பற்றி குர்ஆன் கூறும் கருத்திற்கு மாற்றமாக உள்ளது. கூடுதல் விளக்கம் பார்க்க: நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன? .
  3. மாற்றுக்கருத்து உடையவர்கள் விளக்கத்தை முழுமையாக படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை (1) கண்ணியமான முறையில், (2) ஆதாரத்துடன், (3) சுருக்கமாக பதிவு செய்யவும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24237 , 24300 , 24347 , 24348 , 24650 , புகாரி-3175 , 3268 , 5763 , 5765 , 5766 , 6063 , 6391 , முஸ்லிம்-, இப்னு மாஜா-3545 , குப்ரா நஸாயீ-7569 , இப்னு ஹிப்பான்-6583 , 6584 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.