இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் சத்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடி விடுகிறான். பாங்கு சொல்லி முடித்து விடும் போது திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் திரும்பி ஒடி விடுகிறான். இகாமத் சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான்.
(தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘இப்படி இப்படியெல்லாம் நினைத்துப் பார்’ என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்துகள் தொழுதோமா, நான்கு ரக்அத்துகள் தொழுதோமா என்று தெரியாமல் போய் விடுகிறது.
மூன்று ரக்அத்துக்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால் அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :59
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِذَا نُودِيَ بِالصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ وَلَهُ ضُرَاطٌ، فَإِذَا قُضِيَ أَقْبَلَ، فَإِذَا ثُوِّبَ بِهَا أَدْبَرَ، فَإِذَا قُضِيَ أَقْبَلَ، حَتَّى يَخْطِرَ بَيْنَ الإِنْسَانِ وَقَلْبِهِ، فَيَقُولُ: اذْكُرْ كَذَا وَكَذَا، حَتَّى لاَ يَدْرِيَ أَثَلاَثًا صَلَّى أَمْ أَرْبَعًا، فَإِذَا لَمْ يَدْرِ ثَلاَثًا صَلَّى أَوْ أَرْبَعًا، سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ
சமீப விமர்சனங்கள்