தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-331

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28  உயர் இரத்தப்போக்கு ஏற்பட்ட ஒரு பெண் தமது இரத்தம் மாதவிடாய்க் கால இரத்தமல்ல என்று அறிந்து கொண்டால் (என்ன செய்யவேண்டும்?)

சிறிது நேரம் அவள் சுத்தமானாலும் குளித்து விட்டு அவள் தொழுகையை நிறை வேற்றவேண்டும்; மிகப் பெரிய விஷயமான தொழுகையையே அவள் நிறைவேற்றலாம் எனும் போது அவளுடன் கணவன் தாம்பத்திய உறவுகொள்வதில் தவறில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

  ‘மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டுவிடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்ததைச் சுததம் செய்துவிட்டுத் தொழுது கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6

(புகாரி: 331)

بَابُ إِذَا رَأَتِ المُسْتَحَاضَةُ الطُّهْرَ

قَالَ ابْنُ عَبَّاسٍ: «تَغْتَسِلُ وَتُصَلِّي وَلَوْ سَاعَةً، وَيَأْتِيهَا زَوْجُهَا إِذَا صَلَّتْ، الصَّلاَةُ أَعْظَمُ»

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، عَنْ زُهَيْرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِذَا أَقْبَلَتِ الحَيْضَةُ، فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ، فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.