தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3363

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 உஸ்மான் இப்னு அபீ சுலைமான்(ரஹ்) அறிவித்தார்;
நாங்கள் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது (ஒருவர் அவர்களிடம் ‘மகாமு இப்ராஹீம்’ பற்றி, தான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொன்னபோது) அவர்கள், ‘எனக்கு இப்படி இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்க வில்லை. மாறாக அவர்கள், ‘இப்ராஹீம்(அலை) அவர்கள் (குழந்தை) இஸ்மாயீல்(அலை) அவர்களையும் அவர்களின் தாயாரையும், அவர்கள் இஸ்மாயீல்(அலை) அவர்களுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் தோல் துருத்தி (தண்ணீர்ப் பை) ஒன்று இருக்க, அழைத்துக் கொண்டு முன்னால் சென்றார்கள். பிறகு அவரையும் அவரின் மகன் இஸ்மாயீலையும் இப்ராஹீம்(அலை) அவர்கள் அழைத்து வந்தார்கள்’ என்று கூறினார்கள்.
…’இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) சொல்லவில்லை.
Book :60

(புகாரி: 3363)

قَالَ الْأَنْصَارِيُّ : حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ أَمَّا كَثِيرُ بْنُ كَثِيرٍ فَحَدَّثَنِي قَالَ : إِنِّي وَعُثْمَانَ بْنَ أَبِي سُلَيْمَانَ جُلُوسٌ مَعَ سَعِيدِ بْنِ جُبَيْرٍ فَقَالَ : مَا هَكَذَا حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ قَالَ

أَقْبَلَ إِبْرَاهِيمُ بِإِسْمَاعِيلَ وَأُمِّهِ عَلَيْهِمُ السَّلَامُ وَهِيَ تُرْضِعُهُ مَعَهَا شَنَّةٌ لَمْ يَرْفَعْهُ ثُمَّ جَاءَ بِهَا إِبْرَاهِيمُ وَبِابْنِهَا إِسْمَاعِيلَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.