தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3365

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவாது:
இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் மனைவி (ஸாரா அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது இப்ராஹீம்(அலை) அவர்கள் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் இஸ்மாயீல்(அலை) அவர்களின் தாயாரையும் அழைத்துக் கொண்டு (மக்காவை நோக்கிச்) சென்றார்கள். அப்போது அவர்களுடன் தண்ணீருள்ள தோல் பை ஒன்று இருந்தது. இஸ்மாயீலின் தாயார் அதிலிருந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கினார். அவர்களின் பால்குடி குழந்தை இஸ்மாயீலுக்காக சுரக்கலாயிற்று. பின்னர் இப்ராஹீம்(அலை) அவர்கள் மக்கா வந்து சேர்ந்தார்கள். அங்கே ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஹாஜரைவிட்டுவிட்டு (ஷாமில் உள்ள) தம் குடும்பத்தாரிடம் (ஸாராவிடம்) இப்ராஹீம் திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இஸ்மாயீலின் அன்னை (ஹாஜர்), ‘கதாஉ’ என்னும் இடத்தை அடைந்தவுடன் ‘இப்ராஹீமே! எங்களை யாரிடம்விட்டுச் செல்கிறீர்கள்?’ என்று பின்னாலிருந்து இப்ராஹீமைக் கூப்பிட்டு கேட்டதற்கு அவர் ‘அல்லாஹ்விடம்…’ என்றார். ‘அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு’ என்றார் ஹாஜர். பின்னர் திரும்பி வந்து தோல் பையிலிருந்து நீர் அருந்தினார். அவரின் குழந்தைக்காக பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), ‘நான் போய் (மலை மீதேறி) நோட்டமிட்டால் எவராவது எனக்குத் தென்படலாம்’ என்று கூறினார்கள்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்கச் சென்று ஏறினார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகிறாரா என்று பார்த்தார். ஆனால் எவரும் அவருக்குத் தென்படவில்லை. எனவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்று சேர்ந்தததும் ஓடிச் சென்று மர்வாவை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, ‘நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)’ என்று தமக்குள் கூறினார். எனவே, (மலைக்குச்) சென்று நோட்டமிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில் தான் (அழுதபடி) இறப்பற்கு முன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக் கொண்டிருந்தார். அவரின் (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. எனவே, அவர் (தமக்குள்) ‘நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக் கூடும்’ என்று கூறிச் சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்துவிட்டார். பிறகு, ‘குழந்தை என்ன செய்கிறது என்று நான் போய் பார்த்து வந்தால் (நன்றாயிருக்குமே)’ என்று (தமக்குள்) கூறினார்கள். அந்த நேரத்தில் குரல் ஒன்று வந்தது. (அதைக் கேட்டு) அவர், ‘உங்களால் நன்மை செய்ய முடியுமாயின் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்’ என்று கூறினார். அங்கே (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் நின்றிருந்தார்கள். தம் குதிகாலால் இப்படி சைகை செய்து பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்ணீர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் அதை அணைகட்டி வைக்கப் பள்ளம் தோண்டலானார்.
அபுல் காசிம்(ஸல்) அவர்கள், ‘அவர் அப்படியேவிட்டு விட்டிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக் கூடியதாக இருந்திருக்கும்’ என்று கூறினார்கள்.
உடனே அவர் அந்தத் தண்ணீரைக் குடிக்கலானார். அவரின் பால் அவரின் குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். எனவே, ‘பறவை நீர் நிலையின் அருகில் தானே இருக்கும்’ என்று பேசிக் கொண்டார்கள். தங்கள் தூதரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவரின் தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார். உடனே, தம் குலத்தாரிடம் வந்து அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். அவர்கள் (அன்னை) ஹாஜர்(அலை) அவர்களிடம் சென்று, ‘இஸ்மாயீலின் அன்னையே! நாங்கள் உங்களுடன் இருக்க.. அல்லது உங்களுடன் வசிக்க… எங்களக்கு அனுமதியளிப்பீர்களா? என்று கேட்டார்கள். (அவர்கள் அனுமதியளிக்கவே அங்கேயே வசிக்கலானார்கள்.) ஹாஜருடைய மகன் (இஸ்மாயீல்(அலை) அவர்கள்) பருவ வயதையடைந்தார். ஜுர்ஹும் குலத்தாரிலேயே ஒரு பெண்ணை மணந்தார். பிறகு இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு ஒரு நாள் தம் மனைவியையும் மகனையும் ‘அவர்கள் என்ன ஆனார்கள்’ என்று பார்த்துவிட்டு வரலாமென்று) தோன்றியது. எனவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி ஸாராவிடம்) நான் (மக்காவில்)விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்’ என்று சொல்லிப் புறப்பட்டு (மக்கா)ச் சென்று (இஸ்மாயீல்(அலை) அவர்களின் மனைவியிடம்) ஸலாம் சொல்லி,’இஸ்மாயீல் எங்கே?’ என்று கேட்டார்கள். அதற்கு இஸ்மாயீல்(அலை) அவர்களின் மனைவி, அவர் வேட்டையாடச் சென்றார்’ என்று பதிலளித்தாள். இப்ராஹீம்(அலை) அவர்கள்,’அவர் வந்தால், ‘உன் நிலைப்படியை மாற்றி விடு’ என்று (நான் கட்டளையிட்டதாக) சொல்லிவிடு’ என்று கூறினார்கள். இஸ்மாயீல்(அலை) அவர்கள் வந்தபோது அவரின் மனைவி அதை அவருக்குத் தெரிவித்தார். இஸ்மாயீல்(அலை) அவர்கள்,’நீதான் நிலைப்படி. எனவே, நீ உன் வீட்டாரிடம் சென்று விடு’ என்று கூறினார்கள். மீண்டும் (சிறிது காலத்திற்குப் பிறகு) இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு (மக்காவில் உள்ள மனைவி, மகனைப் பார்த்துவிட்டு வரலாமென்று,) தோன்றவே தம் வீட்டாரிடம்,’நான் (மக்காவில்)விட்டுவிட்டு வந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்து வரப்போகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு மக்காவிற்குச் சென்று,’இஸ்மாயீல் எங்கே?’ என்று அவரின் மனைவியிடம் கேட்டார்கள். அதற்கு அவர்,’வேட்டையாடச் சென்றிருக்கிறார் என்று பதிலளித்தார். பிறகு,’நீங்கள் (எங்களிடம்) தங்கி உண்ணவும் பருகவும் மாட்டீர்களா?’ என்று கேட்டதற்கு இப்ராஹீம்(அலை) அவர்கள்,’உங்கள் உணவும் பானமும் எவை?’ என்று வினவ அவர்,’எங்கள் உணவு இறைச்சியாகும். எங்கள் பானம் தண்ணீராகும்’ என்று கூறினார். இப்ராஹீம்(அலை) அவர்கள்,’இறைவா! இவர்களுக்கு இவர்களுடைய உணவிலும் பானத்திலும் வளத்தை அளிப்பாயாக! என்று கூறினார்கள்.
அபுல் காசிம்(ஸல்) அவர்கள்,'(மக்காவின் உணவிலும் பானத்திலும்) இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனையின் காரணத்தால் தான் வளம் அளிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்கள்.
பிறகு, இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒரு முறை இஸ்மாயீல்(அலை) அவர்களைப் பார்த்து வரவேண்டும் போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ்மாயீல்(அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குப் பின் பக்கத்தில் தம் அம்பைச் சீர் செய்து கொண்டிருக்கக் கண்டார்கள். ‘இஸ்மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்டவேண்டுமென்று எனக்குக் கட்டளையிட்டுள்ளான்’ என்று கூறினார்கள். அதற்கு இஸ்மாயீல்(அலை) அவர்கள்,’அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்’ என்று கூறினார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம்(அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல்(அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தந்தார்கள். இருவரும் (அப்போது),’இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய் (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, ‘(மகாமு இப்ராஹீம்’ என்றழைக்கப்படும்) இந்தக் கல் மீது நின்றார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல்(அலை) கற்களை எடுத்துத் தந்தார்கள். இருவரும்’இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கிறாய்’ (திருக்குர்ஆன் 02:127) என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.
Book :60

(புகாரி: 3365)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ عَبْدُ المَلِكِ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

لَمَّا كَانَ بَيْنَ إِبْرَاهِيمَ وَبَيْنَ أَهْلِهِ مَا كَانَ، خَرَجَ بِإِسْمَاعِيلَ وَأُمِّ إِسْمَاعِيلَ، وَمَعَهُمْ شَنَّةٌ فِيهَا مَاءٌ، فَجَعَلَتْ أُمُّ إِسْمَاعِيلَ تَشْرَبُ مِنَ الشَّنَّةِ، فَيَدِرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا، حَتَّى قَدِمَ مَكَّةَ فَوَضَعَهَا تَحْتَ دَوْحَةٍ، ثُمَّ رَجَعَ إِبْرَاهِيمُ إِلَى أَهْلِهِ، فَاتَّبَعَتْهُ أُمُّ إِسْمَاعِيلَ، حَتَّى لَمَّا بَلَغُوا كَدَاءً نَادَتْهُ مِنْ وَرَائِهِ: يَا إِبْرَاهِيمُ إِلَى مَنْ تَتْرُكُنَا؟ قَالَ: إِلَى اللَّهِ، قَالَتْ: رَضِيتُ بِاللَّهِ، قَالَ: فَرَجَعَتْ فَجَعَلَتْ تَشْرَبُ مِنَ الشَّنَّةِ وَيَدِرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا، حَتَّى لَمَّا فَنِيَ المَاءُ، قَالَتْ: لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ لَعَلِّي أُحِسُّ أَحَدًا، قَالَ فَذَهَبَتْ فَصَعِدَتِ الصَّفَا فَنَظَرَتْ، وَنَظَرَتْ هَلْ تُحِسُّ [ص:145] أَحَدًا، فَلَمْ تُحِسَّ أَحَدًا، فَلَمَّا بَلَغَتِ الوَادِيَ سَعَتْ وَأَتَتِ المَرْوَةَ، فَفَعَلَتْ ذَلِكَ أَشْوَاطًا، ثُمَّ قَالَتْ: لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ مَا فَعَلَ، تَعْنِي الصَّبِيَّ، فَذَهَبَتْ فَنَظَرَتْ فَإِذَا هُوَ عَلَى حَالِهِ كَأَنَّهُ يَنْشَغُ لِلْمَوْتِ، فَلَمْ تُقِرَّهَا نَفْسُهَا، فَقَالَتْ: لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ، لَعَلِّي أُحِسُّ أَحَدًا، فَذَهَبَتْ فَصَعِدَتِ الصَّفَا، فَنَظَرَتْ وَنَظَرَتْ فَلَمْ تُحِسَّ أَحَدًا، حَتَّى أَتَمَّتْ سَبْعًا، ثُمَّ قَالَتْ: لَوْ ذَهَبْتُ فَنَظَرْتُ مَا فَعَلَ، فَإِذَا هِيَ بِصَوْتٍ، فَقَالَتْ: أَغِثْ إِنْ كَانَ عِنْدَكَ خَيْرٌ، فَإِذَا جِبْرِيلُ، قَالَ: فَقَالَ بِعَقِبِهِ هَكَذَا، وَغَمَزَ عَقِبَهُ عَلَى الأَرْضِ، قَالَ: فَانْبَثَقَ المَاءُ، فَدَهَشَتْ أُمُّ إِسْمَاعِيلَ، فَجَعَلَتْ تَحْفِزُ، قَالَ: فَقَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ كَانَ المَاءُ ظَاهِرًا». قَالَ: فَجَعَلَتْ تَشْرَبُ مِنَ المَاءِ وَيَدِرُّ لَبَنُهَا عَلَى صَبِيِّهَا، قَالَ: فَمَرَّ نَاسٌ مِنْ جُرْهُمَ بِبَطْنِ الوَادِي، فَإِذَا هُمْ بِطَيْرٍ، كَأَنَّهُمْ أَنْكَرُوا ذَاكَ، وَقَالُوا: مَا يَكُونُ الطَّيْرُ إِلَّا عَلَى مَاءٍ، فَبَعَثُوا رَسُولَهُمْ فَنَظَرَ فَإِذَا هُمْ بِالْمَاءِ، فَأَتَاهُمْ فَأَخْبَرَهُمْ، فَأَتَوْا إِلَيْهَا فَقَالُوا: يَا أُمَّ إِسْمَاعِيلَ، أَتَأْذَنِينَ لَنَا أَنْ نَكُونَ مَعَكِ، أَوْ نَسْكُنَ مَعَكِ، فَبَلَغَ ابْنُهَا فَنَكَحَ فِيهِمُ امْرَأَةً، قَالَ: ثُمَّ إِنَّهُ بَدَا لِإِبْرَاهِيمَ، فَقَالَ لِأَهْلِهِ: إِنِّي مُطَّلِعٌ تَرِكَتِي، قَالَ: فَجَاءَ فَسَلَّمَ، فَقَالَ: أَيْنَ إِسْمَاعِيلُ؟ فَقَالَتِ امْرَأَتُهُ: ذَهَبَ يَصِيدُ، قَالَ: قُولِي لَهُ إِذَا جَاءَ غَيِّرْ عَتَبَةَ بَابِكَ، فَلَمَّا جَاءَ أَخْبَرَتْهُ، قَالَ: أَنْتِ ذَاكِ، فَاذْهَبِي إِلَى أَهْلِكِ، قَالَ: ثُمَّ إِنَّهُ بَدَا لِإِبْرَاهِيمَ، فَقَالَ لِأَهْلِهِ: إِنِّي مُطَّلِعٌ تَرِكَتِي، قَالَ: فَجَاءَ، فَقَالَ: أَيْنَ إِسْمَاعِيلُ؟ فَقَالَتِ امْرَأَتُهُ: ذَهَبَ يَصِيدُ، فَقَالَتْ: أَلاَ تَنْزِلُ فَتَطْعَمَ وَتَشْرَبَ، فَقَالَ: وَمَا طَعَامُكُمْ وَمَا شَرَابُكُمْ؟ قَالَتْ: طَعَامُنَا اللَّحْمُ وَشَرَابُنَا المَاءُ، قَالَ: اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي طَعَامِهِمْ وَشَرَابِهِمْ، قَالَ: فَقَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَرَكَةٌ بِدَعْوَةِ إِبْرَاهِيمَ صَلَّى اللَّهُ عَلَيْهِمَا وَسَلَّمَ» قَالَ: ثُمَّ إِنَّهُ بَدَا لِإِبْرَاهِيمَ، فَقَالَ لِأَهْلِهِ: إِنِّي مُطَّلِعٌ تَرِكَتِي، فَجَاءَ فَوَافَقَ إِسْمَاعِيلَ مِنْ وَرَاءِ زَمْزَمَ يُصْلِحُ نَبْلًا لَهُ، فَقَالَ: يَا إِسْمَاعِيلُ، إِنَّ رَبَّكَ أَمَرَنِي أَنْ أَبْنِيَ لَهُ بَيْتًا، قَالَ: أَطِعْ رَبَّكَ، قَالَ: إِنَّهُ قَدْ أَمَرَنِي أَنْ تُعِينَنِي عَلَيْهِ، قَالَ: إِذَنْ أَفْعَلَ، أَوْ كَمَا قَالَ: قَالَ فَقَامَا فَجَعَلَ إِبْرَاهِيمُ يَبْنِي، وَإِسْمَاعِيلُ يُنَاوِلُهُ الحِجَارَةَ وَيَقُولاَنِ: {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ} [البقرة: 127]. قَالَ: حَتَّى ارْتَفَعَ البِنَاءُ، وَضَعُفَ الشَّيْخُ عَنْ نَقْلِ الحِجَارَةِ، فَقَامَ عَلَى حَجَرِ المَقَامِ، فَجَعَلَ يُنَاوِلُهُ الحِجَارَةَ وَيَقُولاَنِ: {رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ العَلِيمُ} [البقرة: 127]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.