தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3374

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மகன் இஸ்ஹாக் (அலை) அவர்களின் நிகழ்ச்சி.

இது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களும், அபூஹுரைரா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்கள்.

பாடம் : 14

(அல்லாஹ் கூறுகிறான்:) யஅகூபை இறப்பு அணுகிய போது நீங்கள் அங்கிருந்தீர்களா? அவர் இறக்கும் வேளையில் தம் மக்களிடம் கேட்டார்: மக்களே! எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்? அதற்கு அவர்கள், உங்கள் இறைவனும் உங்கள் முன்னோர்களான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமான ஒரே இறைவனையே வணங்குவோம். அத்துடன் நாங்கள் அவனுக்கே கீழ்ப்படிந்த முஸ்லிம்களாக இருப்போம் என்று கூறினார்கள். (2:133)49

 அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தாம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!’ என்று பதிலளித்தார்கள்.

அதற்கு மக்கள், ‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரைகளான) சுரங்கங்களைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம் இஸ்லாத்தை ஏற்ற பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 60

(புகாரி: 3374)

بَابُ قِصَّةِ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ عَلَيْهِمَا السَّلاَمُ

فِيهِ ابْنُ عُمَرَ، وَأَبُو هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

بَابُ {أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ المَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ} [البقرة: 133] الآيَةَ

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ المُعْتَمِرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قِيلَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ «أَكْرَمُهُمْ أَتْقَاهُمْ» قَالُوا: يَا نَبِيَّ اللَّهِ، لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَأَكْرَمُ النَّاسِ يُوسُفُ نَبِيُّ اللَّهِ، ابْنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ، ابْنِ خَلِيلِ اللَّهِ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ العَرَبِ تَسْأَلُونِي» قَالُوا: نَعَمْ، قَالَ: «فَخِيَارُكُمْ فِي الجَاهِلِيَّةِ خِيَارُكُمْ فِي الإِسْلاَمِ إِذَا فَقُهُوا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.